லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்கிலாந்து ராணி எலிசபெத் முதுகில் கை வைத்த டொனால்ட் டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    இங்கிலாந்து ராணி எலிசபெத் முதுகில் கை வைத்த டொனால்ட் டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை-வீடியோ

    லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் முதுகில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கை வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசு பரம்பரைக்குரிய விதிகளை மீறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் இங்கிலாந்து சென்றுள்ளனர். இருவருக்கும் இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Donald Trump broke Royal Protocol by touching Queen?

    இங்கிலாந்து அரண்மனையில் இருவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியின் போது எலிசபெத் ராணியின் முதுகில் டொனால்ட் டிரம்ப் கைவைத்துள்ளார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் ராணியை யாரும் தொட்டு பேச கூடாது என்பது விதியாகும். அது போல் இது பொது இடத்தில் அரசு குடும்பத்தினரிடம் எப்படி பழகுவது என்பது குறித்த எழுதப்படாத விதியாகும்.

    இந்தி திணிப்பு: வரைவு திருத்தத்துக்கு எதிராக கஸ்தூரி ரங்கன் குழு உறுப்பினர்கள் போர்க்கொடி இந்தி திணிப்பு: வரைவு திருத்தத்துக்கு எதிராக கஸ்தூரி ரங்கன் குழு உறுப்பினர்கள் போர்க்கொடி

    இதுபோன்ற விதிகள் அரசு குடும்பத்தின் இணையத்தில் போடப்படவில்லை. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் ராணியையோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ சந்திக்கும் போது நடத்தை விதிகள் ஏதும் கட்டாயமில்லை. எனினும் ஏராளமான மக்கள் பழங்கால பழக்கவழக்கங்களை பின்பற்ற விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் ராணியின் முதுகில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொட்டு பேசியது விதிமீறலாக கருதப்படுவதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    American President Donald Trump touches Queen Elizabeth as No one should touch the Queen is unwritten rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X