லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

12 முதல் 17 வயது உள்ள சிறார்களுக்கு செலுத்தலாம்.. மாடர்னாவின் தடுப்பூசிக்கு ஐரோப்பா ஒப்புதல்

Google Oneindia Tamil News

லண்டன் : 12 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தில் பயன்படுத்தப்படும் இளம் பருவத்தினருக்கான இரண்டாவது தடுப்பூசியாக அமைந்துள்ளது.

"12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளில் ஸ்பைகேவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்துவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்பட்டது போலவே இருக்கும்" என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (இஎம்ஏ), மாடர்னாவின் பிராண்ட் பெயரைப் (ஸ்பைகேவாக்ஸ் ) பயன்படுத்தி கூறியது.

European medicines watchdog approves Modernas Covid vaccine for children aged 12-17

ஸ்பைகேவாக்ஸ் தடுப்பூசி இரண்டு டோஸ் நான்கு வாரங்கள் இடைவெளியில் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட ஏஜென்சியின் முடிவின்ப டி ஐரோப்பிய சிறார்களுக்கான (12 முதல் 17 வயது ) முதல் தடுப்பூசி ஃபைசர் / பயோஎன்டெக்க்கு மே மாதத்தில் ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் 12 முதல் 17 வயது வரையிலான 3,732 குழந்தைகளிடையே ஸ்பைகேவாக்ஸின் செலுத்திஅதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் கிடைத்த நல்ல அறிக்கையை அடிப்படையாக வைத்து மாடர்னாவின் ஸ்பைகேவாக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
the European medicines watchdog on Friday approved the use of Moderna's coronavirus vaccine for children aged 12 to 17, making it the second jab for adolescents for use on the continent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X