லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவுக்கு ஒகே.. அமெரிக்காவுக்கு நோ.. இன்று முதல் 15 நாட்டினர் வரலாம்..ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

Google Oneindia Tamil News

லண்டன்: ஜூலை 1 முதல் 15 நாடுகளுக்கு தனது எல்லைகளைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டது, ஆனால் கொரோனா வைரஸ் இன்னும் பரவி வரும் அமெரிக்கா மட்டும் இந்த லிஸ்டில் சேர்க்கப்படவில்லை.

அதேநேரம் இந்த பட்டியலில் சீனா இடம்பிடித்துள்ளது. ஆனால் சீனாவிற்கு அனுமதி அளித்ததைப்போல், சீனா ஐரோப்பியர்களுக்கும் அவ்வாறே அனுமதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் புதுப்பிக்கப்படும்,

அமெரிக்கா சேர்க்கப்படாத நிலையில், அமெரிக்காவின் அண்டை நாடான கனடா மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் உருகுவே ஆகியவை வெள்ளிக்கிழமை வரையப்பட்ட பட்டியலில் நிபந்தனைகள் இல்லாமல் சேர்க்கப்பட்டன, ஆனால் இதற்கு இறுதி ஒப்புதல் தேவைப்படுகிறது.

கொரோனா போல பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள புதிய வைரஸ்.. சீன பன்றிப் பண்ணைகளில் கண்டுபிடிப்பு.. ஷாக்கொரோனா போல பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள புதிய வைரஸ்.. சீன பன்றிப் பண்ணைகளில் கண்டுபிடிப்பு.. ஷாக்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

எல்லை திறப்பு பட்டியலில் அல்ஜீரியா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் துனிசியா நாடுகளை சேர்க்க . ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் வாக்களித்து ஒப்புதல் அளித்துள்ளன.

தொற்று குறைவு

தொற்று குறைவு

மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் தேசிய எல்லைகளை தொற்றுநோய் வளர்ந்தவுடன் எல்லைகளை உடனடியாக மூடின. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளன.

ஒன்றியம் அறிவிப்பு

ஒன்றியம் அறிவிப்பு

15 நாடுகளுக்கு திறப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட பட்டியல் சட்டபூர்வமாக பிணைக்கப்படாதது என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பரிந்துரையின் உள்ளடக்கத்தை செயல்படுத்துவதில் பொறுப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒன்றியத்தில் உள்ள நாடுகள் சேர்ந்து ஒருங்கிணைந்து முடிவு எடுக்காமல் தேசிய அதிகாரிகள் "பயணக் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    5G Network : China-வின் Huawei-க்கு No சொன்ன Singapore
    அமெரிக்காவை சேர்க்க தயக்கம்

    அமெரிக்காவை சேர்க்க தயக்கம்

    டிசம்பர் 31 ஆம் தேதி தான் பிரெக்சிட் ஒப்பந்த மாற்றம் அமலுக்கு வர உள்ளது. எனவே தற்போதைய நிலையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஐரோப்பாவில் கொரோனா பரவல் வேகம் கடந்த இரண்டு வாரங்களில் வெகுவாக குறைந்துவிட்டது. அதேநேரம் அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா அதிகரித்துக்கொண்டே சென்ற காரணத்தால் ஒன்றியத்தில் உள்ள சில ஐரோப்பிய நாடுகள் தயங்கின. இதனால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவிற்கு தடை தொடர்கிறது.

    English summary
    European Union on Tuesday agreed to Reopens Borders To 15 Nations Including China, US Excluded
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X