லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகள்.. ஒன்றுவிடாமல் பட்டியலிட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுக்கு பின்னடைவு?| EU against CAA: India is facing a major diplomatic setback

    லண்டன்: இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகளை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டது ஐரோப்பிய யூனியன் தீர்மானம்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.

    அந்த கூட்டத் தொடரில் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை 150-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தாக்கல் செய்யவுள்ளனர். இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகளை ஒன்று விடாமல் ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்டது.

    தேசிய மக்கள் பதிவேடு

    தேசிய மக்கள் பதிவேடு

    அதில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தும் ஒன்றாகும். உத்தரப்பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனுபவித்த கொடுமைகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டால் மக்கள் படும் துயரம் ஆகியவை பட்டியலிடப்பட்டன. தேசிய மக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்தியா

    இந்தியா

    இந்த சட்டம் மிகப் பெரிய மனித துயரத்தை ஏற்படுத்தும். குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பல அரசியல் தலைவர்கள் இழிவுப்படுத்துகின்றனர். இந்த சட்டம் மூலம் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் இந்திய குடியுரிமை பெறும் சம வாய்ப்புக்கான அடிப்படை உரிமைகளை அகற்றும் காரணியை இந்தியா உருவாக்கிவிட்டது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்திய அரசு

    இந்திய அரசு

    இந்த தீர்மானம் குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதுகுறித்த நகல் இந்திய அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    வாக்கெடுப்பு

    வாக்கெடுப்பு

    ஐரோப்பிய யூனியன் தாக்கல் செய்யவுள்ள தீர்மானங்களால் இந்தியாவுக்கு மிகப் பெரிய அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் பிரசல்ஸில் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    European Union list out actions taken by Indian Government which is against to International norms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X