லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவின் சிஏஏ அபாயகரமானது.. பாரபட்சமானது.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Europe moves resolution against CAA

    லண்டன்: இந்தியாவில் அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் தீர்மானம் கொண்டு வரவுள்ளனர்.

    பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்து, கிறிஸ்துவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதை எதிர்த்து இந்தியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.

    சட்டம்

    சட்டம்

    அந்த கூட்டத் தொடரில் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை 150-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தாக்கல் செய்யவுள்ளனர். அந்த தீர்மானத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காகவே இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது.

    மக்கள் நாடற்றவர்கள்

    மக்கள் நாடற்றவர்கள்

    அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டால் ஏராளமான மக்கள் நாடற்றவர்களாக்கப்படுவர். குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும் வகையில் இந்தியா இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அடிப்படையிலேயே பாரபட்சமானது என ஐநா மனித உரிமை ஆணையம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது. அதன் ஆணையரும் அதைத்தான் கூறியுள்ளார்.

    அடக்குமுறை

    அடக்குமுறை

    எனவே இந்தியா இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல், அடக்குமுறை குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். குடியுரிமை சட்டத்தையும் அதன் விளைவுகளையும் சமத்துவம், பாகுபாடற்றதன்மை, சர்வதேச கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யுங்கள்.

    மிருகத்தனம்

    மிருகத்தனம்

    அமைதியாக போராட அனுமதியுங்கள். இந்த சட்டம் அமலாக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் மிருகத்தனம் என கண்டிக்கிறோம் என அந்த தீர்மானத்தில் கூறியுள்ளனர்.

    ஐரோப்பிய யூனியன்

    ஐரோப்பிய யூனியன்

    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வரும் மார்ச் 13-ஆம் தேதி இரு நாடுகளுக்கிடையேயான மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி பிரசல்ஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானங்கள் குறித்து டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளது.

    English summary
    Europena Union has moved resolutions that slams Citizenship amendment act is dangerous move.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X