லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரில் 370 நீக்க விவகாரம்.. தீர்மானம் கொண்டு வருகிறது ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுக்கு பின்னடைவு?| EU against CAA: India is facing a major diplomatic setback

    லண்டன்: காஷ்மீர் மறுசீரமைப்பை எதிர்த்து இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

    நரேந்திர மோடியாக பிரதமர் பொறுப்பேற்ற இந்த ஆறரை ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் சர்வதேச நாடுகளால் கண்டனத்தை பெற்றவையாகும்.

    கடந்த 2016-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் எதிர்ப்பை தெரிவித்தன. அது போல் காஷ்மீரில் பல ஆண்டுகளாக அமலில் இருந்த 370 சட்டப்பிரிவு கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.

    காஷ்மீரில் சிறையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்காஷ்மீரில் சிறையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

     ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    இதுவும் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இதை எதிர்த்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநா சபையில் முறையிட்டார். அப்போது சில நாடுகள் கண்டித்தன. சில நாடுகள் இது இந்தியாவின் உள்விவகாரம் என கைவிரித்துவிட்டன. பாகிஸ்தான் பிரதமர் சீனாவுடன் சேர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எத்தனையோ முறை மன்றாடி பார்த்தார்.

     இந்திய குடியுரிமை

    இந்திய குடியுரிமை

    ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் குடியுரிமை சட்டதிருத்தம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், புத்தர் மதத்தினர், சீக்கியர்கள் உள்ளிட்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    தீர்மானம்

    தீர்மானம்

    இதை இந்திய எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளும் எதிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் குடியுரிமை சட்டம் பாரபட்சமானது என்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் ஜாதி, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கக் கூடாது என்றும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

     ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    இந்த நிலையில் சர்வதேச விதிகளுக்கு எதிராகவும் மனித உரிமைதள் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராகவும் இந்தியா எடுத்த அதிரடி முடிவுகளை ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்டுள்ளது. அதில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தும் ஒன்றாகும். உத்தரப்பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனுபவித்த கொடுமைகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டால் மக்கள் படும் துயரம் ஆகியவை பட்டியலிடப்பட்டன. காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

    English summary
    European Union Parliament to pass resolution against Kashmir 370 dilution and police firing on protestors against CAA in UP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X