லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னைக்கு ஞாயிறு.. நிச்சயம் பிரியாணி செய்வீங்க.. உங்களுக்கு இந்த வீடியோ உபயோகமா இருக்கும்!

Google Oneindia Tamil News

லண்டன்: வெள்ளைப் பூண்டை எளிதாக உரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஞாயிறு என்றாலே அசைவப் பிரியர்களுக்கு ஓய்வை விட, ஆடு, கோழி, மீன் போன்றவைதான் கண் முன் வந்து போகும். அந்தளவிற்கு ஞாயிற்றுக் கிழமைகள் அசைவ உணவுக்கான நாளாக மாறிவிட்டது.

அப்படியாக அசைவ உணவு செய்யும் போது நிச்சயம் பூண்டும், இஞ்சியும் இன்றியமையாதது. உடல் நலனுக்கு மிகவும் நல்லதான பூண்டை உரிப்பதற்குள் நமக்கு நிச்சயம் பொறுமை போய்விடும். ஆனால், இனி அந்த கஷ்டம் இல்லை.

ஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்ஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்

பூண்டு உரிக்கும் வீடியோ:

பூண்டு உரிக்கும் வீடியோ:

பூண்டை எப்படி சுலபமாக உரிக்கலாம் என்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. @VPestilenZ என்கிற ட்விட்டர் பயனர், "நான் அதிகமாக கொரிய உணவுகளை சமைப்பேன். அதற்கு பூண்டு அதிகமாக தேவைப்படும். அப்படி தேவைப்படும் பூண்டை உரிப்பதற்கு இதுதான் சிறந்த வழி" என்று பதிவிட்டு, கூடவே பூண்டை உரிக்கும் வீடியோவையும் அப்லோடு செய்துள்ளார்.

மக்கள் ஆச்சர்யம்:

மக்கள் ஆச்சர்யம்:

அந்த வீடியோவில், ஒரு கத்தி மூலம் பூண்டில் குத்தி உருவப்படுகிறது. அப்படி உருவும்போது பூண்டின் மேல் தோல் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் பூண்டு அழகாக வெளியே வந்துவிடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சி:

இப்படி பூண்டு உரிப்பதால், கைகள் பிசுபிசுக்காது, நகத்தின் இடுக்குகளிலும் காயம் ஏற்படாது. இதனால் இந்த முறையை பெரிதும் மக்கள் பாராட்டி வருகின்றனர். இது வரை அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இனி அதிகம் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வோம் என மகிழ்ச்சியாக நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர்.

சந்தேகம்:

சந்தேகம்:

ஆனால், நிஜத்திலும் இதே போல் பூண்டை உரிக்க முடியுமா என்பது சந்தேகமே. வீடியோவில் ஏதாவது ட்ரிக்கைப் பயன்படுத்திக்கூட பூண்டை எளிதாக உரிப்பது மாதிரி காட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் பல நெட்டிசன்களுக்கு உள்ளது. நிஜத்தில் பரிசோதித்துப் பார்த்தால் மட்டுமே இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவரும்.

English summary
The garlic peeling hack was shared by Twitter user '@VPestilenZ', who wrote:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X