லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி!

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பா நாடுகளுடன் மோதல் போக்கை சீனா கடைபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தற்போது ஜெர்மனியின் கடும் கோபத்திற்கு சீனா ஆளாகி உள்ளது.

உலகம் முழுக்க வல்லரசு நாடுகளையும் வளர்ந்த நாடுகளையும் சீண்டுவதே சீனாவின் வேலையாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இந்தியாவுடன் மோதல். தென்சீன கடல் எல்லையில் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உடன் மோதல்.

வர்த்தக, அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் மோதல். ஜப்பான் உடன் அண்டை தீவுகளில் மோதல், ஆஸ்திரேலியா, கனடா உடன் ராஜாங்க ரீதியான மோதல் என்று சீனா உலகம் முழுக்க பெரிய நாடுகள் பலவற்றுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது.

போர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே சீனா ஆணவம்! போர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே சீனா ஆணவம்!

ஐரோப்பா மோதல்

ஐரோப்பா மோதல்

இந்த நிலையில்தான் தற்போது ஐரோப்பா உடன் சீனா மோதி வருகிறது. கொரோனா வைரஸ் தொடக்கத்தில் இருந்தே ஐரோப்ப நாடுகள் சீனா மீது கோபத்தில்தான் இருந்தது. சீனாவின் பொருளாதார ரீதியான அழுத்தம் காரணமாகவும், கொரோனா தகவல்களை மறைத்தது என்று கூறியும் சீனா மீது ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கோபத்தில் இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

இப்போது ஐரோப்ப நாடுகளில் ஒன்றான செக் குடியரசு குறித்து சீனா தெரிவித்த விஷயம் ஒன்று ஐரோப்பா நாடுகளை கொத்திக்க வைத்துள்ளது. செக் குடியரசின் செனட் அதிபர் மீலொஸ் விஸ்ட்ரிஸ்ச் கடந்த சில நாட்கள் முன் தைவான் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்தார். சீனாவிற்கு இந்த பயணம் கோபத்தை உண்டாக்கியது. சீனாவிற்கு கிழக்கு பக்கத்தில் தென் சீன கடல் எல்லையில் இருக்கும் குட்டி தீவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

தைவான்

தைவான்

ஆனால் தைவான் தங்களை சுதந்திர நாடு என்று அறிவித்து உள்ளது. தைவான் தனி நாடாக இருந்தாலும், சீனா அங்கு மறைமுகமாக ஏதாவது ஒரு வகையில் அழுத்தம் செலுத்தியே வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பா நாட்டை சேர்ந்த தலைவர் தைவான் வருவது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்தது. தைவான் பிரச்சனை இதனால் உலக அளவில் பெரிதாகும் என்று சீனா அஞ்சுகிறது. ஏற்கனவே தைவானில் அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து சீனாவிற்கு எதிராக அங்கு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபம் வந்தது

கோபம் வந்தது

செக் செனட் அதிபர் இப்படி தைவான் சென்றதால் கோபம் அடைந்த சீனா,அவருக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தது. அதில், செக் குடியரசு எல்லை மீறிவிட்டது. சீனாவில் உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பா தலையிட கூடாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நீங்கள் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். எங்கள் நாட்டு பிரச்சனையில் நீங்கள் தலையிட்டது மிகப்பெரிய தவறு என்று சீனா, செக் குடியரசுக்கும், செனட் அதிபருக்கும், ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

கோபமான பதிலடி

கோபமான பதிலடி

இதற்குதான் தற்போது ஐரோப்ப நாடுகளில் ஒன்றான ஜெர்மனி அதிரடி பதிலடி கொடுத்துள்ளது. அதில், ஐரோப்பா நாடுகளை சீனா இப்படி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐரோப்பா நாடுகள் ஒற்றுமையான நாடுகள். ஒருவரை குறித்து தவறாக பேசினால், அனைத்து நாடுகளும் இதை எதிர்த்து கேட்கும். நாங்கள் உலக நாடுகளை மதிக்கிறோம்.

மிக மோசம்

மிக மோசம்

அதே போல் உலக நாடுகளும் எங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களையே மிரட்ட முடியாது. மிரட்டி எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. மிரட்டல் எங்களிடம் வேலை செய்யாது. சீனா தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது, என்று ஜெர்மனி மிக கடுமையாக இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

Recommended Video

    சீனாலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் கம்பெனிகள்
    சீனா மறுப்பு

    சீனா மறுப்பு

    இந்த நிலையில் சீனா தற்போது இதில் கொஞ்சம் அடக்கமாக போக தொடங்கி உள்ளது. சீனாவின் வெளியறவுத்துறை அமைச்சர் வாங்க் இ தற்போது ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். ஐரோப்ப நாடுகளை சமாதானம் செய்யும் வகையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார். ஐரோப்ப நாடுகள் உடனே உறவை முறித்துக்கொள்ளும் எண்ணம் சீனாவிற்கு இல்லை என்று வாங்க் இ குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Germany Condemns China for fighting with European nations on Taiwan issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X