லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்கிலாந்து வான்பரப்பை தெறிக்கவிட்ட பறக்கும் எறும்புகள்.. பரபரக்க வைத்த 2 மணிநேரம்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தின் வான்பரப்பில் பறக்கும் எறும்புகள் 2 மணிநேரம் அலை அலையாக பறந்தது பலரையும் அதிசயிக்க வைத்தது.

இங்கிலாந்து வான்பரப்பில் திடீரென மழைமேகம் போல ஒரு பெருந்திரளான கூட்டம் ஒன்று உருவானது. வழக்கம் போல மழைக்கு முன்னர் உருவாகும் மேகம்தான் இது என நினைத்தனர் வானிலை ஆய்வாளர்கள்.

Giant flying ants spotted UK Space

ஆனால் வழக்கமான மேகமூட்டத்துக்கும் இந்த திடீர் காட்சிக்கும் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதை ஆராய்ந்த போதுதான் பறக்கும் எறும்புகள்தான் வானில் வட்டமடித்து பயணித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

பறக்கும் எறும்புகள் கூட்டத்தில் ராணி எறும்பு இனப்பெருக்கத்துக்காக இன்னொரு இடத்தை நோக்கி நகருமாம்.. அப்போது ஆண் எறும்புகள் ராணி எறும்பை பின் தொடர்ந்து பயணிக்குமாம். இந்த இயற்கை நிகழ்வுதான் வான் பரப்பு அதிசயமாக மாறியது.

பள்ளிக்கூடத்தை எப்ப திறக்கலாம்.. ஒரு ஐடியா கொடுங்க.. மாநிலங்களைக் கேட்கும் மத்திய அரசு!பள்ளிக்கூடத்தை எப்ப திறக்கலாம்.. ஒரு ஐடியா கொடுங்க.. மாநிலங்களைக் கேட்கும் மத்திய அரசு!

இத்தகைய நிகழ்வுகள் ஆரோக்கியமான சுற்றுச் சூழலின் வெளிப்பாடு என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமூக வலைதளங்களில் #flyingants #flyingantday ஆகிய ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு இவை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

English summary
Giant Swarm of flying ants had appeared on UK weather radar like rain clouds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X