லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பிரிவில் பணியாற்றிய பெண் மருத்துவர் 9 வாரங்கள் கழித்து சர்ப்ரைஸ் ஆக வந்து தனது மகள்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்தில் கடந்த இருமாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் அங்கு வேகமாக அதிகரித்து வந்தது. அந்த நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.

அப்படி பணியாற்றி வரும் மருத்துவர்களில் ஒருவர் தான் சுசி வாகன் வயது 43. இவருக்கு ஏழு வயதில் ஹெட்டி என்ற மகளும், ஒன்பது வயதில் பெல்லா மகளும் உள்ளனர். நோர்போக்கைச் சேர்ந்த சுசி வாகன் கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் இயக்கத் துறை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பணியாற்றி வந்ததால் 9 வாரங்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார்.

பாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்.. அட கொடுமையேபாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்.. அட கொடுமையே

பதுங்கி அமர்ந்தார்

பதுங்கி அமர்ந்தார்

சுசி வாகன் 9 வாரம் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு வீட்டிற்கு சென்றார். வீட்டில் மகள்கள் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். சுசி வாகன் மெல்ல குழந்தைகளின் பின்புறம் போய் அவர்களுக்கு தெரியாமல் பதுங்கி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய ஒரு மகள் எதேச்சையாக திரும்பி பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

பாசப்போராட்டம்

பாசப்போராட்டம்

தன் தாயை 9 வாரத்திற்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியை இரு குழந்தைகளும் தாயை கட்டி தழுவி கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர். சுசி வாகனும் ஆனந்த கண்ணீரில் கூச்சலிட்டார். இந்த பாசப்பிணைப்பான போராட்டம் தத்ரூபமாக அப்படியே வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 9 வாரங்கள் அம்மாவை பிரிந்த குழந்தைகள் தனது சித்தி வீட்டில் (தாயின் சகோதரி வீட்டில்) வசித்து வந்தனர்.

வலிமையான பெண்

வலிமையான பெண்

இந்த வீடியோ வெளியான ஒரு நாளில் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கானனோர் உருக்கமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர் அந்த மருத்துவரை வரவேற்பதாக கூறியிருந்தார். மற்றொருவர், "என்னை விட வலிமையான பெண். என் குழந்தைகளிடமிருந்து ஒன்பது வாரங்கள் பிரிந்து செயல்படுவது ஒரு போதும் முடியாது என்கிறார்.

கவலைப்பட்டேன்

கவலைப்பட்டேன்

இந்த பிரிவு குறித்து மருத்துவர் சுகி வாகன் கூறுகையில். "இது அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு மட்டுமே இருக்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம், ஆனால் இது எப்படிப் போகிறது என்பதை இதன் ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது, அவர்களை மீண்டும் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது, நான் சிறுமிகளை மிகவும் தவறவிட்டேன். என பிறந்தநாளில் கூட எனது மகள்களை பார்க்காமல் இருந்தேன். இது ஒரு கடினமான முடிவு. நான் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்று நானே சிந்திக்க வேண்டியிருந்தது, நான் எதையாவது(கொரோனாவை) திரும்பக் கொண்டுவந்துவிடக்கூடாது என மிகவும் கவலைப்பட்டேன்," என்று கூறினார். லாக்டவுன் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்துவதால் திங்களன்று குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதற்கு முன்பு ஒருவருக்கொருவர் பிடிக்க வாரத்தை செலவிட சுசி வாகனின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.

English summary
A healthcare worker has been reunited with her daughters after nine weeks apart during the pandemic in england
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X