லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் பயிற்சி.. எச்எம்எஸ் குயின் எலிசபெத் போர் கப்பலை அனுப்பும் பிரிட்டன்

Google Oneindia Tamil News

லண்டன்: சீனாவுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் கப்பலும் முதல்முறையாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் சேரவுள்ளது.

இங்கிலாந்தின் புத்தம் புதிய விமானம் தாங்கி கப்பலான 2,57,04 கோடி மதிப்புள்ள எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் கப்பல் தூர கிழக்கில் பயிற்சிக்காக முன்வைக்கப்பட்டுள்ளது என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் 5 ஜி நெட்வொர்க்கில் ஹவாய் ஈடுபடுவதிலும், புதிய ஹாங்காங் பாதுகாப்புச் சட்ட விஷயத்திலும் இங்கிலாந்து மற்றும் சீனா இடையே முரண்பாடு எழுந்துள்ளது.

லடாக்.. அடுத்த லெவல் மீட்டிங்.. இந்தியா - சீனா ராணுவம் இடையே எல்லையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!லடாக்.. அடுத்த லெவல் மீட்டிங்.. இந்தியா - சீனா ராணுவம் இடையே எல்லையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

இங்கிலாந்து முடிவு

இங்கிலாந்து முடிவு

இந்நிலையில் சீனாவிற்கு பெய்ஜிங்கிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்கா கூறிய நிலையில் தான் எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் கப்பலை தூர கிழக்கு (ஆசியா ஐரோப்பா இணையும் இடம்) பகுதிக்கு இங்கிலாந்து அனுப்ப முடிவு செய்துள்ளது.

45 ஏவுகணை அழிப்பான்கள்

45 ஏவுகணை அழிப்பான்கள்

இங்கிலாந்து இராணுவத் தலைவர்களின் புதிய திட்டங்களின்படி எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் கப்பல் அடுத்த ஆண்டு அனுப்பிவைக்கப்பட உள்ளது. விமானம் தாங்கி கப்பல் இரண்டு வகை 45 ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் இரண்டு போர் கப்பல்கள் உள்ளிட்ட போர்க்கப்பல்களுடன் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் கப்பல் செல்ல உள்ளது.

அமெரிக்கா உடன் இணைந்து

அமெரிக்கா உடன் இணைந்து

எஃப் -35 பி மின்னல் II ஜெட் விமானங்களின் இரண்டு படைகளுடனும் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் கப்பல் நிறுத்தப்பட உள்ளது. இது RAF மற்றும் அமெரிக்க கடற்படையிடம் இருந்து வந்துள்ளது. ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீனாவை எதிர்ப்பதற்காக இந்த கப்பல்கள் களம் இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

போர் விமானங்களை நிறுத்தி

போர் விமானங்களை நிறுத்தி

எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் என்ற பிரிட்டனின் கப்பல் பயிற்சியை முடிக்கும்போது எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் இப்பகுதிக்கு அனுப்பவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சீனாவிடம் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள கப்பல் அனுப்பி வைக்கப்படுவதை ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் ஜெர்ரி கிட், பிரிட்டன் கடற்படை "இந்தோ-பசிபிக் பகுதிக்கு திரும்பி வரப் போகிறது" என்று கூறினார். எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் கப்பலில் அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்களை நிலைநிறுத்தி தேவைப்படும் போது பதிலடி கொடுக்க முடியும் என்பதால் ராணுவ பயிற்சிக்காக எடுத்து செல்லப்படுகிறது.

English summary
HMS Queen Elizabeth'S maiden voyage will be to join the US and Japan's joint military exercises in the Far East, as tensions with China continue to rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X