லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி!

இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது, என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது, என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர் லண்டனில் கைதானார்.

இவர் வழக்கு லண்டனில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஐஐடி மாணவர்களை வேலைக்கு எடுக்கத் தயங்கும் கம்பெனிகள்! காரணம் பொருளாதார மந்த நிலை!

பெயில் வேண்டும்

பெயில் வேண்டும்

இந்த நிலையில் நீரவ் மோடி ஐந்தாவது முறையாக பெயில் வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். 4 முறை இவரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனால் ஐந்தாவது முறையாக மீண்டும் அவர் மனுதாக்கல் செய்தார்.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் ஆஜரான நீரவ் மோடி, தான் இருக்கும் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அதிக கொடுமை நடக்கிறது. அங்கு எல்லோரும் என்னை மோசமாக நடத்துகிறார்கள். என்னை மோசமாக தாக்கினார்கள்.

பேசினார்

பேசினார்

ஜெயில் கைதிகள் என்னுடைய அறைக்குள் வந்து இதுவரை மூன்று முறை மோசமாக தாக்கி இருக்கிறார்கள். எனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். என்னால் இந்தியாவிற்கு செல்ல முடியாது. இந்தியாவில் நியாயமான முறையில் விசாரணை நடக்காது.

இங்கேயே இருக்கிறேன்

இங்கேயே இருக்கிறேன்

நான் இங்கேயே இருக்கிறேன். இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது, என்று நீரவ் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

English summary
I will commit suicide if I extradited to India says Nirav Modi in London court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X