லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இம்ரான் மாஜி மனைவிக்கு எதிராக பாக் டிவி அவதூறு.. போட்டார் வழக்கு.. பொளேர் தீர்ப்பளித்த லண்டன் கோர்ட்

Google Oneindia Tamil News

லண்டன் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் மீதான அவதூறு வழக்கில் லண்டன் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் நீதி வென்றுள்ளதாகவும், அதன்மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் ரேஹம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் பாகிஸ்தானின் துன்யா டிவியில் தற்போது ரயில்வே அமைச்சராக உள்ள சையிக் ரஷீத், ரேஹம் கான் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் ரேஹம் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ரேஹம் கான், பிரிட்டீஷ் குடியுரிமையை பெற்று அங்கு வசித்து வருகிறார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், அவதூறு செய்தி வெளியிட்ட பாகிஸ்தானின் துன்யா டிவி, நிபந்தனைகளற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

விடிகாலையில்.. ஓடி கொண்டிருந்த கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்!விடிகாலையில்.. ஓடி கொண்டிருந்த கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்!

அவதூறு கருத்துக்கள்

அவதூறு கருத்துக்கள்

ரேஹம் கான் குறித்து பாகிஸ்தானின் துன்யா தொலைக்காட்சி கடந்த 2018ல் அவதூறு கருத்துக்களை ஒளிபரப்பியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"எதிர்கட்சிகளிடம் காசு வாங்கினார்"

ரேஹம் கான் தன்னுடைய சுயசரிதையை எழுதிய நிலையில், அதற்காக பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் ஷாபாஸ் செரீப்பிடம் காசு வாங்கியதாகவும், எதிர்கட்சித் தலைவர்களுடன் அவர் கூட்டு வைத்துள்ளதாகவும் அந்த ஒளிபரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தொலைக்காட்சியில் நேரடி குற்றச்சாட்டு

தொலைக்காட்சியில் நேரடி குற்றச்சாட்டு

துன்யா டிவியில் கடந்த 2018ல் பேசிய தற்போதைய இம்ரான்கான் அரசின் ரயில்வே அமைச்சர் சையின் ரஷீத், ரேஹம் கான் குறித்த இத்தகைய குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எதிர்கட்சிகளை குற்றம் சாட்டும் வகையிலும் ரேஹம் கான் அவர்களுடன் கூட்டு வைத்திருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டு அமைந்திருந்தது.

லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சையத் ரஷீத்தின் இந்த குற்றச்சாட்டு தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக வருத்தம் தெரிவித்த ரேஹம் கான், இதுகுறித்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

துன்யா டிவி மன்னிப்பு கோரியது

துன்யா டிவி மன்னிப்பு கோரியது

தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று லண்டன் உயர்நீதிமன்றத்தில் துன்யா டிவி நிபந்தனைகளற்ற மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் ரேஹம் கானின் மன உளைச்சலுக்காகவும் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

நீதிமீது நம்பிக்கை

நீதிமீது நம்பிக்கை

இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரேஹம் கான், இந்த தீர்ப்பின்மூலம் நீதி மற்றும் நியாயம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் தன்னை குறித்த அவதூறு செய்திகளை பரப்பாது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Imran khans ex wife glads on victory of her defamation case victory
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X