லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1908ல் மிஸ்ஸானது 2019ல் நடக்கும்.. பூமியை தாக்க வரும் பெரிய விண்கல்.. லண்டன் விஞ்ஞானிகள் அலெர்ட்!

அடுத்த வருடம் பூமியை பெரிய விண்கல் ஒன்று தாக்க வாய்ப்புள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    1908-ல் மிஸ்ஸானது 2019ல் நடக்கும்... விண்கல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை- வீடியோ

    லண்டன்: அடுத்த வருடம் பூமியை பெரிய விண்கல் ஒன்று தாக்க வாய்ப்புள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த 1908 பூமியை ஒரு விண்கல் தாக்கியது. 1908 ஜூலை 30ம் தேதி சைபீரியாவில் இந்த விண்கல் விழுந்தது. 800 சதுர அடி நிலப்பரப்பு கொண்டு நிலம் இதனால் நாசமானது.

    அப்பார்ட்மெண்ட் அளவில் விழுந்த இந்த எரிகல் நிகழ்வை விஞ்ஞானிகள், ''தி தூங்குஸ்கா நிகழ்வு''' என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் இதனால் யாரும் உயிரிழக்கவில்லை.

    மீண்டும் நடக்கும்

    மீண்டும் நடக்கும்

    இந்த நிலையில் இதே போன்ற நிகழ்வு மீண்டும் நடக்கும் என்று லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த வரும் ஜூன் மாதம் ஒரு பெரிய விண்கல் பூமியை தாக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அளவு எப்படி இருக்கும் என்று தெரியாது என்று கூறியுள்ளனர்.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    1908ல் நடந்த நிகழ்வே எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அப்போது பூமியை மோதிய விண்கல் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. இதுவரை மனித வரலாற்றில் நடந்த மிகப்பெரிய விண்கல் தாக்குதல் இதுதான். அதைவிட பெரிய தாக்குதலாக அடுத்த வருட நிகழ்வு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    எப்படி கணித்தார்கள்

    எப்படி கணித்தார்கள்

    அதன்படி லண்டன் விஞ்ஞானிகள் இதில் முக்கியமான விஷயம் ஒன்றையும் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமி மீது விழுந்த நிகழ்வு ஒரு சுழற்சி முறையில் நடக்கிறது. அதனால், பூமி மீது ஜூலை மாதங்களில் கண்டிப்பாக விண்கல் விழ வேண்டும். சுழற்சிப்படி வரும் 2019 ஜூலையில் இந்த சம்பவம் நடக்கும் என்று கணித்துள்ளனர்.

    என்ன நடக்க வாய்ப்புள்ளது

    என்ன நடக்க வாய்ப்புள்ளது

    ஆனால் இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டிக்கவில்லை. அதேபோல் இந்த விண்கல் பூமி மீது மோதாமல் தவறி செல்லவும் வாய்ப்பும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்த வருடம் மே மாதத்தில்தான் இந்த விண்கல் பூமியில் மோதுமா, மோதாதா என்பதை விவரமாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

    English summary
    In 2019 July earth may see a major Asteroid attack says London Scientists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X