லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கலில் 1 லட்சம் பேர்.. பிரிட்டனில் உள்ள இந்திய அகதிகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசு..என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் உள்ள இந்தியாவை சேர்ந்த அகதிகளை ஏற்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்தே பிரிட்டனில் அதிக அளவில் இந்தியர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு முயன்று வருகிறது. பிரிக்சிட்டிற்கு முன்பாக இவர்களை இந்தியா அனுப்ப பிரிட்டன் முயன்று வருகிறது.

இதற்காக கடந்த மாதம் லண்டனில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் அப்போதைய பிரிட்டன் பிரதமர் தெரசா மே பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார். அப்போதே கையெழுத்தாக வேண்டிய, அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

என்ன ஒப்பந்தம்

என்ன ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின்படி பிரிட்டனில் இருக்கும் இந்திய அகதிகள் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள். உலக நாடுகள் பல பிரிட்டனில் உள்ள அவர்கள் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

பிரிட்டனில் உள்ள இந்திய அகதிகளின் எண்ணிக்கை 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இருக்கலாம் என்று பிரிட்டன் ஆவணங்கள் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் என்று கூறப்படுகிறது. கணிசமான அளவில் இந்திய இஸ்லாமியர்களும் இதில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மத்திய அரசு

ஆனால் மத்திய அரசு

ஆனால் மத்திய அரசு இவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்க வாய்ப்பில்லை, 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இவர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறது. இவர்களை இப்போது அவசரமாக எங்களால் ஏற்க முடியாது என்றுள்ளது. அதேபோல் இவர்களை ஏற்காததற்கு காரணம் பாதுகாப்புதான் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

அதாவது இந்த அகதிகளில் பலர் காஷ்மீர் பிரிவினை வாதிகள், இன்னும் சிலர் பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கு ஆபத்தானவர்கள். இவர்களை ஏற்க முடியாது. இவர்களை இந்தியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது என்று மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக மறுத்து வருகிறது. இதனால்தான் இந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாமல் இருக்கிறது.

என்ன அழுத்தம்

என்ன அழுத்தம்

இது தொடர்பாக பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. மற்ற நாடுகள் அவர்களின் அகதிகளை ஏற்றுக்கொள்கிறார்கள் . அதனால் நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக விரைவில் மீண்டும் பிரிட்டன் இந்தியா இடையே மீட்டிங் நடக்கும் என்று கூறுகிறார்கள்.

English summary
India rejects nearly 1 lakh illegal immigrants from UK, Says No to sign in the agreement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X