லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்த உலக பொருளாதாரத்தையும் பின்னால் இழுப்பது இந்தியாதான்.. ஐஎம்எப் கீதா கோபிநாத் பகீர் தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரம் பின்னடைவை சந்திப்பதற்கு இந்தியா ஒரு முக்கியமான காரணம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

சுவிச்சர்லாந்தின், டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் ஐம்பதாவது வருடாந்திர உலக பொருளாதார கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கீதா கோபிநாத், இந்திய செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் இந்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.

கீதா கோபிநாத் கூறியதை பாருங்கள்:

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை 2019 ஆம் ஆண்டில் 2.9 சதவீதமாகவும், 2020 ஆம் ஆண்டில் 3.3 சதவீதமாகவும் நாங்கள் கணித்துள்ளோம், இது அக்டோபர் மாத மதிப்பீட்டை விட 0.1 சதவீதம் குறைவு. இதன் தாக்கத்தில் பெரும்பாலும், இந்தியாவிடமிருந்துதான் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

80 சதவீதம்

80 சதவீதம்

உலக பொருளாதார மந்தநிலைக்கு, இந்தியாவின் பங்களிப்பு எத்தனை சதவீதம் இருக்கக்கூடும் என்று கேட்ட கேள்விக்கு, சாதாரணமாக ஒரு கணக்கீடு செய்தால், அநேகமாக 80% இந்தியாவின் தாக்கத்தால் தான் நிகழ்ந்திருக்கக் கூடும், என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இதுபற்றி கீதா கோபிநாத் கூறுகையில், நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு கால் ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருந்தது. நிதித்துறை மிகமோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. கடன் வழங்கும் பணிகள் மிகவும் குறைந்துள்ளன. இவை போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை குறைத்து மதிப்பிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வளர்ச்சி அதிகரிக்கும்

வளர்ச்சி அதிகரிக்கும்

அதே நேரம் இந்த நிலை மாறி 2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும், 2021 ஆம் ஆண்டில் இது 6.5 சதவீதமாக மேலும் வளர்ச்சி அடையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எதிர்காலம்

எதிர்காலம்

ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரம் பின்னடைவை சந்திப்பதற்கு இந்தியா ஒரு முக்கியமான காரணம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த நிலை மாறி 2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும், 2021 ஆம் ஆண்டில் இது 6.5 சதவீதமாக மேலும் வளர்ச்சி அடையும்.

English summary
The chief economist of the International Monetary Fund (IMF), Gita Gopinath said that India was primarily responsible for the downgrade in global growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X