லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டனில் இந்திய வம்சா வழி தம்பதிகள் மகனுடன் தற்கொலை!!

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் வாழ் இந்திய வம்சா வழி தம்பதிகள் தங்களது 3 வயது மகனுடன் வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களது மரணம் தற்கொலை மற்றும் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இறந்த தம்பதிகள் குஹா ராஜ் சிதம்பரானந்தன் (42), காமேஸ்வரி சிவராஜ் (36), கைலாஷ் குஹா (3) மூவரும் மேற்கு லண்டனில் இருக்கும் பிப்ரன்ட்ஃபோர்டு பகுதியில் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தாய் மற்றும் மகனை இறுதியாக பார்த்ததாக அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

Indian-origin family found dead with 3 year old son at UK home

இந்த தம்பதிகளின் வீட்டுக்கு உறவினர்கள் பலமுறை போன் செய்தும் அவர்கள் பேசவில்லை. இதையடுத்து, உள்ளூர் போலீசாருக்கு அவர்களது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து, இந்த தம்பதிகளின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவர்களது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மூவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இவர்களில் கணவர் குஹா ராஜின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து இது தற்கொலை மற்றும் கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Kamala Harris and Mike Pence Debate: அனல் பறக்குமா... நாளை காலை நேருக்கு நேர் விவாதம்!!Kamala Harris and Mike Pence Debate: அனல் பறக்குமா... நாளை காலை நேருக்கு நேர் விவாதம்!!

இதுகுறித்து குற்றவியல் சிறப்பு போலீஸ் அதிகாரி தெரிவித்து இருக்கும் தகவலில், ''முதலில் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை எங்களது குழுவினர் ஆராய இருக்கின்றனர். எது கொலை செய்ய தூண்டியது மற்றும் குஹா ராஜின் மரணம் குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம்.

எங்களது முதல் கட்ட தகவலில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் கைலாஷ் மற்றும் காமேஸ்வரி சிவராஜ்என்ற பூர்ணாவை அந்தப் பகுதியில் யாரும் பார்க்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது வரைக்கும் இதில் தொடர்புடையதாக யாரையும் நாங்கள் விசாரிக்கவில்லை. உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.

English summary
Indian-origin family found dead with 3 year old son at UK home
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X