• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

16 வயது மாணவன்.. 23 வயது ஆசிரியை.. சேர்ந்து செய்த அசிங்கம்.. நீதிபதி காட்டம்

|

லண்டன்: 16 வயது மாணவருடன் உறவு கொண்ட 23 வயது பெண் ஆசிரியருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்ததை போல, ஆசிரியை ஒருவரே மாணவருடன் உடலுறவு கொண்ட அசிங்க சம்பவம்தான் இது. அயர்லாந்து நாட்டில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.

மாணவரின் 16வது பிறந்த நாள் தினத்தில், பிறந்தநாள் பரிசாக தன்னையே கொடுத்துள்ளார் அப்போது 23 வயதாக இருந்த அந்த ஆசிரியை. அதற்கு சரியாக 12வது நாள் கழித்து மீண்டும், தன்னை விருந்தாக்கியுள்ளார், அந்த ஆசிரியை.

16 வயது

16 வயது

நமது நாட்டிலாவது மேஜராக 18 வயது. அயர்லாந்தில் 17 வயதானால் அந்த நபர் மேஜராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், 16வது வயதில் மாணவருடன் உடலுறவு கொண்டதால்,இது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், 16 வயதானால் வழக்கு வராது என்றுதான், காத்திருந்து, அந்த சிறுவனுக்கு 16 வயது பிறந்ததும், பிறக்காததுமாக, உடலுறவை அரங்கேற்றியுள்ளார் ஆசிரியை. ஆனால் சட்டத்தின்பிடியில் சிக்கிக்கொண்டார்.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

இந்த ஜோடி 2017 ஆம் ஆண்டில் ஒரு இரவு விடுதியில் முதல் முதலில் சந்தித்தது. அப்போது சிறுவனுக்கு 15 வயது. பார்த்ததுமே, அவன் மீது ஆசிரியைக்கு மையல் ஏற்பட்டது. கட்டியணைத்துள்ளார். பிறகு பள்ளியிலும் ஸ்னாப்சாட்டிலும், இருவரும், தொடர்ந்து நட்பை தொடர்ந்துள்ளனர். ஆசிரியை அந்த சிறுவனை 2018ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஒரு லாங் டிரைவ் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு பிறந்தநாள் பரிசை வாங்கி கொடுத்து, உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது சந்தர்ப்பத்தில், அதாவது 12 நாள் கழித்து, உணவகத்திற்கு சென்று இருவரும் சாப்பிட்டுவிட்டு, ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கி, காம இச்சையை தீர்த்துள்ளனர்.

விசாரித்த தாய்

விசாரித்த தாய்

பையன் போகிற போக்கு சரியில்லை என்பதை, அவரின் தாயாரும் உணர்ந்துள்ளார். யாரோ ஒரு பொண்ணு கூட கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான் பையன் என்ற அளவில்தான் முதலில் அவருக்கு தெரிந்துள்ளது. ஆனால், மகன் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், பக்கத்து வீட்டுக்கார பையன் உட்பட தனது மகனின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார் அந்த தாய்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

அப்போதுதான் தனது மகன், ஆசிரியருடன் உறவில் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதிர்ச்சியடைந்த அந்த தாய், இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகத்திற்கும் அதன்பிறகு, போலீசுக்கும் தெரிவித்துள்ளார். போலீசாரும் முதலில் இதை நம்பவில்லை, ஆனால், கடந்த அக்டோபரில் டப்ளின் விமான நிலையத்தில் வைத்து ஆசிரியையை, கைது செய்து அவரிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை அவர் புட்டுபுட்டு வைத்துவிட்டார்.

நீதிமன்றம் கருத்து

நீதிமன்றம் கருத்து

இந்த வழக்கு விசாரணை, டப்ளின் சர்க்யூட் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி மார்ட்டின் நோலன் முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் தனது மீது வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாகவும், அவரது நடவடிக்கைகள் நெறிமுறையற்றவை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மீண்டும் சிறுவனை 'கொடுமைப்படுத்த' வாய்ப்பில்லை என்றாலும், உடனடி காவல் அவசியம் என்றும் நீதிபதி கூறினார். 3 ஆண்டுகள் ஆசிரியைக்கு சிறை தண்டனை வழங்க முடியும் என்றபோதிலும், அதில் இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் குற்றவாளிகளின் பதிவேட்டில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

 
 
 
English summary
A woman teacher who had sex with one of her stuent has been sentenced to a year in jail at Dublin Circuit Criminal Court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X