லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவியாக சிரியா ஓடி வந்து, வயிற்றில் குழந்தையோடு லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் 'மாஜி தீவிரவாதி'

Google Oneindia Tamil News

Recommended Video

    குழந்தையின் நலனுக்காக லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் மாஜி தீவிரவாதி- வீடியோ

    லண்டன்: சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், துருக்கி சென்ற அவர்கள் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.

    ISIS Women: wish to return to London

    இதில், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை ஷமீமா மணந்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. இதற்கிடையே, அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

    ஷமீமாவின் கணவர் சிரியா போலீசில் சரணடைந்த நிலையில், ராக்காவிற்கு வந்த ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஷமீமா அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டார். தற்போது, 9 மாத கர்ப்பிணியாக உள்ள ஷமீமா கூறுகையில், குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியோத்துடன் பிறக்க வேண்டும் என்றும்,குழந்தையுடன் அமைதியான வாழ்வை தொடர லண்டன் திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வல்லஸ் பேசுகையில், கர்ப்பிணி பெண் நாடு திரும்ப உதவி செய்யப்படும். ஆனால், அந்த பெண் தீவிரவாதிகளுக்கு உதவியதால் சிறை செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

    English summary
    9-month-old pregnant ISIS Women expressed the desire to return to London.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X