லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கம்ப்யூட்டர்கள்.. மொபைல்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்.. காஸ்பெர்ஸ்கை ஆண்டி வைரஸ் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி

    லண்டன்: கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமல்ல கம்ப்யூட்டர்களையும், மொபைல்போன்களையும் இப்போது தாக்கி வருவதாக காஸ்பெர்ஸ்கை ஆண்டி வைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

    கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 10 ஆயிரம் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 பேரை தனி அறையில் வைத்து சோதித்து வருகிறார்கள்.

    நடுத்தெருவில் விழுந்து கிடந்த சடலம்.. வுஹான் நகர கொடுமை.. உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ் நடுத்தெருவில் விழுந்து கிடந்த சடலம்.. வுஹான் நகர கொடுமை.. உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ்

    அவசர நிலை

    அவசர நிலை

    உலகில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தியா உள்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற நாடுகளிலும் நிலைமை கொஞ்சம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு, உலக சுகாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளது

    மொபைலில் கொரோனா

    மொபைலில் கொரோனா

    இந்த சூழலில் மக்கள் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று இணையங்களில் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதை பயன்படுத்தி சிலர் வைரஸ்களை கணினி மற்றும் மொபைல்களுக்கு அனுப்பி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    எப்படி வரும்

    எப்படி வரும்

    உளவு பார்க்கவும், தகவல்களை திருடவும், கணினி மற்றும் மொபைல்களுக்கு கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி, கொரோனா தடுப்பு முறைகள், கொரோனா மருந்து என கொரோனா வைரஸ் பெயரில் பல பிடிஎப் பைல்களை இணையதளங்களில் வைத்துள்ளார்கள். அனுப்புகிறார்கள். அதை திறந்து பார்த்தால் ஒன்றும் இருக்காதாம்.

    காஸ்பெர்ஸ்கை எச்சரிக்கை

    காஸ்பெர்ஸ்கை எச்சரிக்கை

    அத்தகைய ஃபைல்கள் மூலம் உங்கள் கணினி, மொபைல் போன்களில் மால்வேர்கள் ஊடுருவிடும் என்றும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் காஸ்பெர்ஸ்கை ஆண்டி வைரஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை வைத்து இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறது என்ற பீதி மக்களிடையே அதிகரித்து வருகிறது. மக்களின் அச்சத்தை பயன்படுத்தி திருட்டுத்தனம் செய்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    English summary
    kaspersky antivirus warns users, coronavirus will attacked computers and mobile phones
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X