லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீரவ் மோடிக்கு ஜாமீன் அளிக்க முடியாது.. விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.. லண்டன் கோர்ட் அதிரடி!

லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு பெயில் அளிப்பது தொடர்பான வழக்கை இன்று விசாரிக்கிறது.

Google Oneindia Tamil News

லண்டன்: நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீரவ் மோடி இந்தியா கொண்டு வரப்படுவாரா என்பது பெரிய விவாதமாக மாறியுள்ளது. நீரவ் மோடி இந்தியா கொண்டு வரப்படும்பட்சத்தில் அது மத்திய அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

முதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்முதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்

விசாரணை நடந்து வருகிறது

விசாரணை நடந்து வருகிறது

இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவரின் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள இவரின் பல கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது. இது தொடர்பாக லண்டனிலும் விசாரணை நடந்து வருகிறது.

எங்கு

எங்கு

ஆனால் இவர் எங்கே இருக்கிறார் என்ற விஷயம் மட்டும் தெரியாமல் இருந்தது. மேற்கத்திய தீவுகளில் இவர் பதுங்கி இருக்கிறார். பிரிட்டனில் சில நாடுகளில் மறைமுகமாக வசித்து வருகிறார் என்றெல்லாம் நிறைய செய்திகள் வந்தது. கடைசியில் நீரவ் மோடி லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்டார்

லண்டனில் தியேட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ் மூலம் இவர் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் 19ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று விசாரணை

இன்று விசாரணை

மத்திய லண்டன் வங்கியில் இவர் புதிய கணக்கு துவங்க வந்த போது போலீசால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு பெயில் அளிப்பது தொடர்பான வழக்கை இன்று விசாரித்தது. நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக நீரவ் மோடி வழக்கறிஞருக்கும், இந்திய அதிகாரிகளின் வழக்கறிஞர் தரப்பிற்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்றது.

முடிவு

முடிவு

இந்த நிலையில் விசாரணையின் முடிவில் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் நீரவ் மோடி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Will Nirav Modi get bail after 10 days Jail life? London court hears the case today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X