லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி

Google Oneindia Tamil News

லண்டன்: பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலரும் கல்வி உரிமை போராளியுமான மலாலா யூசப்., காஷ்மீர் மாணவர்கள் பள்ளி செல்வதற்கு ஐநா சபை உதவ வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதனை பார்த்து கோபம் அடைந்த இந்தியர்கள் பலர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலரும் கல்வி உரிமை போராளியுமான மலாலா யூசப் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா யூசப், தனது டுவிட்டர் பதிவில், ஐநா சபை தலைவர்கள், காஷ்மீரில் அமைதிக்காக பணியாற்ற வேண்டும், காஷ்மீரிகளின் குரல்கள் கேட்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல உதவ வேண்டும்.

அன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்!அன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்!

41 நாட்கள் பள்ளி செல்லவில்லை

41 நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் உள்ளார்கள். பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டு வாழ்ந்து வருவதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கிறது. உலகில் இருந்து காஷ்மீர் மக்கள் துண்டிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களின் குரல்களை கேட்க முடியவில்லை என கூறியிருந்தார்.

சிறுமியை கொல்ல முயற்சி

இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளனர். சிவசேனா கட்சியின் துணை தலைவர் பிரியங்கா சதுர்வேதி, தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் எவ்வாறு பயங்கரவாதத்தை திட்டமிட்டு ஆதரித்தது, சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்பட்டனர். கல்வி கற்க முயன்ற சிறுமிகளைக் கொல்ல முயற்சித்தார்கள். மலாலா இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

சிறுபான்மையினருக்காக பேசுங்க

கர்நாடகாவின் சிக்மங்களூரு எம்பியும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாகிய சோபா கூறுகையில், நோபல் பரிசு வென்றவருக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்காவும் சிறிது நேரம் பேச வேண்டும். சொந்த நாட்டில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து நீங்கள் உரக்க பேச வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் காஷ்மீரிலும் செயல்படுத்தப்படுகினற்ன. அதுவும் அங்கு தடுக்கப்படவில்லை" என கூறியுள்ளார்.

காஷ்மீருக்காக இந்தியர்கள்

பெங்களூருவைச் சேர்ந்த ராஜானிஸ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், மலாலா ஜி, பாகிஸ்தானில் சிலருக்கு எதிராக போராட நீங்கள் எடுத்த முயற்சிக்காக உங்களை பாராட்டுகிறேன். பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள், பாகிஸ்தான் இந்துக்கள், பாகிஸ்தான் சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு உங்கள் உதவிதேவை. அதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். காஷ்மீருக்காக 130 கோடி இந்தியர்கள் இருக்கிறோம். நாங்கள் பார்த்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

English summary
malala on twitter: I am asking leaders, at #UNGA and beyond, to work towards peace in Kashmir, listen to Kashmiri voices and help children go safely back to school
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X