• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விதிகளை மீறியது தவறுதான்... முத்த சர்ச்சையில் சிக்கிய மாஜி பிரிட்டன் அமைச்சர் மன்னிப்பு கோரினார்

Google Oneindia Tamil News

லண்டன்: விதிகளை உருவாக்கிய நாங்களே விதிமீறலில் ஈடுபட்டது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்பதாக உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த பிரிட்டன் சுகாதாரத்துறை மாஜி அமைச்சர் வீடியோவில் கூறியுள்ளார்.

  கொரோனா விதிமீறல்... பொது இடத்தில் லிப்லாக் முத்தம்... இங்கிலாந்து அமைச்சர் பதவி அம்பேல்!

  பிரிட்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பால் கோவிட் பரவல் மிக வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது பிரிட்டன் அரசு. கட்டுப்பாடுகளின் பயனாக கொரோனா பாதிப்பும் குறைந்துள்ளது. விரைவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின்.. ராஜஸ்தான் பெண் குணமடைந்தார் டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின்.. ராஜஸ்தான் பெண் குணமடைந்தார்

  பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும், ஏராளமானோருக்கு டெல்டா வைரஸ் பரவியுள்ளதால் அரசு சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

  சமூக இடைவெளி

  சமூக இடைவெளி

  கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
  உறவினராகவோ, ரத்த சொந்தமாக இருந்தாலும், எந்த ஒரு சந்தோஷத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பதோ முத்தமிடுவதோ கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

  ரொமான்ஸ் செய்த அமைச்சர்

  ரொமான்ஸ் செய்த அமைச்சர்

  இந்த சூழ்நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாட் ஹன்காக் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளார். மாட் ஹன்காக் தனது அலுவலகத்தில் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த கினா கொலடங்கேலோ என்ற பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  சர்ச்சையான வீடியோ

  சர்ச்சையான வீடியோ

  ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் அமைச்சர், உதவியாளருடன் செய்த ரொமான்ஸ் காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  ராஜினாமா செய்த உதவியாளர்

  ராஜினாமா செய்த உதவியாளர்

  கொரோனா விதிகளை மீறி நடந்து கொண்ட மாட் ஹன்காக்கை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியான உடன் கினா கொலடங்கேலோ தனது வேலையை ராஜினாமா செய்தார்.

  போரிஸ் ஜான்சன்

  போரிஸ் ஜான்சன்

  பிரிட்டனில் கொரோனா பரவலை திறமையாக கையாண்டு கட்டுப்படுத்திய ஹன்காக் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் உறுதியாக இருந்தார். மாட் ஹான்காக் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட் ஹான்காக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

  மாட் ஹன்காக் ராஜினாமா

  மாட் ஹன்காக் ராஜினாமா

  எதிர்க்கட்சியினரின் தொடர் அழுத்தம் காரணமாக மாட் ஹன்காக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து பிரதமருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். இது தொடர்பாக உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

  மன்னிப்பு

  மன்னிப்பு

  இந்த தொற்றுநோய்களில் சாதாரண மக்கள் செய்த தியாகங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நாம் ஏதாவது தவறு செய்தால், அதற்கு நாம் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். கொரோனாவின் 'வழிகாட்டுதல்களை மீறியதற்காக' மன்னிப்பு கோருகிறேன் என்றும் பேசியுள்ளார். அவரது ராஜினாமாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை திறமையாக கையாண்டு நல்ல பெயர் எடுத்த மாட் ஹன்காக் கடைசியில் முத்த சர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்துள்ளார்.

  English summary
  Britain's health minister Matt Hancock resigned Saturday, a day after he apologized for breaching social distancing rules with the aide. Those of us who make these rules have got to stick by them and that's why I've got to resign," the 42-year-old said in a video on Twitter.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X