ஒரே நாளில் 10 லட்சம் கொரோனா கேஸ்கள்.. தாங்குமா நாடுகள்.. அதிர்ந்து நிற்கும் ஐரோப்பா யூனியன்
லண்டன்: உலக அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், ஐரோப்பாவில் மட்டும் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியுள்ளது.
2019 முதல் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. முதல் அலையில் மொத்த உலகமும் லாக்டவுனில் சென்றது. பலி எண்ணிக்கையும் அதிகரித்தது, அடுத்துவந்த டெல்டா வகை கொரோனா வீரியமாக இருந்தது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் பல நாடுகளில் இறப்பு விகிதம் வேகமாக அதிகரித்தது. தற்போது பல நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி இருக்கிறது. ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25.73 கோடியைக் கடந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54.88 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று கொரோனா நோயின் மையமாக மாறிவருகிறது. 52 நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. ஐரோப்பா யூனியனில் மட்டும் தினசரி பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோயின் தீவிரம் அதிகமாக இருக்கிறது.
சராசரியாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை தினமும் 3,413 ஆக உள்ளது. உலகளவில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையில் இது 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி உள்ளனர். பல நாடுகளில் இருந்து வரும் விமான சேவையையும் ரத்து செய்துள்ளது.
ஒருபக்கம் குளிர் வாட்டினாலும் 4 நாட்களுக்கு மழையும் இருக்காம் - மீனவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு
இதுவரை 61 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். பொது மக்களும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை எடுப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.