லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்து மருத்துவமனையில் சுவாரசியம்.. அழகிய முன்பற்களுடன் பிறந்த அதிசய குழந்தை

Google Oneindia Tamil News

இங்கிலாந்து : மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்றை பார்த்து மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும், குழந்தையின் பெற்றோரும் மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளாகினர். ஏனெனில் பிறந்த அந்த குழந்தைக்கு இரு முன்பற்கள் இருந்தது.

இங்கிலாந்தை சேர்ந்த 18 வயதான நெரிசா உட்வர்ட் என்ற இளம் கர்ப்பிணி செயின்ட் மேரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

Miraculous baby born with front teeth .. wonder in UK hospital!

மயக்கம் தெளிந்த பின் பிறந்த தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆசையாக குழந்தையை தூக்கிய நெரிசாவிற்கு ஆச்சர்யம் காத்திருந்தது. தன் குழந்தைக்கு 2 முன்பற்கள் இருப்பதை பார்த்து மிகுந்த வியப்படைந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்த தனது கணவரை கூப்பிட்டு குழந்தைக்கு பற்கள் இருப்பதை காட்டினார். அவரது கணவரும் அதனை பார்த்து ஆச்சர்யமடைந்து செவிலியரை அழைத்து வந்தார்.

குழந்தையை பார்த்த செவிலியரும் இது போல பற்களுடன் குழந்தை பிறப்பது மிகவும் அரிதான விஷயம் என கூறி ஆச்சர்யமடைந்துள்ளார். மேலும் இதுவரை இந்த மருத்துவமைனையில் இப்படி குழந்தை பிறந்தது இல்லை எனவும் குறிப்பிட்டார்.

காக்டெயில் பார்ட்டிக்கு ஒரு எபிசோடா...? முடியலடா சாமி...! காக்டெயில் பார்ட்டிக்கு ஒரு எபிசோடா...? முடியலடா சாமி...!

அதிசய குழந்தை குறித்து தாய் நெரிசா கூறுகையில், என்னுடைய மகளுக்கு பற்கள் இருப்பதை பார்த்து நாங்கள் அனைவருமே பெரும் வியப்படைந்தோம்.
தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைக்கு இருக்கும் அந்த அழகிய சிறிய பற்களால் எனக்கு மிகவும் சிரமாக இருந்தது.

பற்களால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர் எனவே பிறந்த 1 மணி நேரத்திலே குழந்தையின் அந்த அழகிய இருமுன் பற்கள் அகற்றப்பட்டுவிட்டது என்றார் மேலும் பற்களுடன் பிறந்த அந்த அழகிய குழந்தைக்கு எமிலியா ஹார்பர் என பெயிரிட்டுள்ளனர்.

English summary
Everybody was surprised at the birth of a child in the UK hospital. Because the baby that was born was two front teeth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X