பாவமே! பிரெண்ட் என நம்பி வீட்டில் விட்டேன்! ஆனால் மனைவிக்கு பாய்-பிரெண்ட் ஆகிட்டான்! புலம்பும் கணவர்
லண்டன்: தன்னை ஏமாற்றி சென்ற மனைவியை நினைத்து, பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் புலம்பல் இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஆண்-பெண் உறவு என்பது எப்போதுமே சிக்கலான ஒரு விஷயம் தான். நமது நாட்டில் மட்டுமே விவகாரத்து என்பது மிகவும் கம்மியாக உள்ளது.
வெளிநாடுகளில் விவகாரத்து என்பது சாதாரணமாக ஒன்றாகிவிட்டது. அதேபோல திருமணம் மீறிய உறவும் கூட வெளிநாடுகளில் அதிகம் காணப்படும்.
ஆசைக்கு இணக்க மறுத்த மனைவி! 40 நாளே ஆன பச்சிளம் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை! தந்தை வெறிச்செயல்

திருமண முறிவு
மன அழுத்தம் உள்ளிட்டவை கணவன்-மனைவி இடையேயான உரையாடலைக் குறைக்கிறது. இது இரு தரப்பிற்கும் இடையேயான புரிதலையும் சீர்குலைக்கிறது. இதுவே மணமுறிவு, விவகாரத்து ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. விவகாரத்தைக் காட்டிலும் திருமணத்திற்கு மீறிய உறவு தான் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. அதுபோன்ற சம்பவங்களில் கணவன்-மனைவிக்கு இடையே மோசமான சண்டைகள் கூட ஏற்படும்.

பிரிட்டன்
இந்த நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் தான் முன்னாள் காதலன் உடன் தனது மனைவி தப்பான உறவைக் கொண்டு உள்ளதைக் கண்டறிந்துள்ளார். அந்த நபர் இதற்கு முன்பும் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் இருப்பினும், அவரை நண்பர் என்றே கருதியதாகவும் புலம்புகிறார் அந்த கணவர்!

கள்ள உறவு
இது குறித்து அந்த கணவர் கூறுகையில், "ஒரு முறை வீட்டில் நடைபெற்ற விருந்தில் அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொள்வதை நான் கண்டுபிடித்தேன். அப்போது தான் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் முறைகேடான உறவை நான் கண்டுபிடித்தேன். அவர்கள் பல மாதங்களாக ரகசிய உறவில் இருந்து வந்துள்ளனர். நான் வேலையில் இருக்கும் போது வீட்டில் மீட் செய்துள்ளனர். பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதற்காகவே கூட ஹோட்டல்களையும் புக் செய்துள்ளனர்.

துரோகம்
அவர்கள் எனக்குத் துரோகம் செய்துள்ளனர். இருப்பினும், எனது மனைவி தனது கள்ள உறவை முடித்துக் கொண்டதாக எனக்கு உறுதி அளித்தார். அந்த நபரை மீண்டும் பார்க்கவோ பேசவோ மாட்டேன் என்றார். மேலும் எனது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். எங்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்., நாங்கள் இருவரும் இன்னும் ஒருவரையொருவர் ஆழமாக லவ் செய்கிறோம். திருமணம் நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்!" என்றார்.

புலம்பும் கணவர்
இரு தரப்பும் சில கவுன்சிலிங் கூட சென்றுள்ளனர். இருப்பினும் அவரது மனைவி இதில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லையாம். கள்ள உறவில் இருந்த நபர் உடனும் காதல் இல்லை என மறுக்கிறாராம். வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருப்பதாக உணர்ந்ததாகவும் இதனால் தான் கள்ள உறவில் ஈடுபட்டதாகவும் மனைவி கூறினாராம். இருப்பினும், அவரது கணவர் ஏதோ அவரிடம் தான் குறை இருக்கிறது எனப் புலம்பித் தள்ளுகிறார்.

தீர்வு
இது குறித்து மனநல ஆலோசகர் ஒருவர் கூறுகையில், "வாழ்க்கைத் துணை கள்ள உறவில் ஈடுபடும்போது, இதுபோன்ற சிந்தனை வருவது நார்மல் தான். இதுபோன்ற நேரங்களில் கவுன்சிலிங் தான் ஒரே தீர்வு. இது விரைவான தீர்வு அல்ல. அதேநேரம் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இது மட்டுமே தீர்வு. இந்த வலி மிகுந்த காலத்தைத் தாண்டினால் மட்டும் மகிழ்ச்சியாக இடத்திற்கு வாழ்க்கையை வாழ முடியும்" என்றார்.