லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சார் யார்னு தெரியுதா.. "சிவப்பு ரோஜாக்கள்" பட கமல் மாதிரியே தொப்பி, கண்ணாடி.. செம வைரல் போட்டோ

லண்டன் ஓட்டலில் டீ குடிக்கும் நவாஸ் ஷெரீப்பின் போட்டோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

லண்டன்: 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கமல் ஒரு தொப்பி போட்டிருப்பாரே.. அதே மாதிரி ஒரு தொப்பியை போட்டுக் கொண்டு லண்டனில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார் நவாஸ் ஷெரீப்.. உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் என்று கருதப்பட்ட நிலையில், இப்படி டீ குடித்து கொண்டிருக்கும் போட்டோவை பார்த்ததும் பலரும் கொதித்து வருகின்றனர்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.. இவருக்கு 70 வயதாகிறது.. ஊழல் வழக்கில் சிக்கியவர்.. கைதாகி ஜெயிலுக்கும் போனார்.. 7 வருஷம் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் ஜெயிலில் இருந்தபோது திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் நவாசுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், அதற்கு வெளிநாடு சென்றுதான் சிகிச்சை தர வேண்டும் என்று கோர்ட்டில் இவரது குடும்பத்தினர் மனு அளித்து அனுமதியும் பெற்றனர்.

ஒரு கையில் விஷம்.. மறு கையில் செல்பி.. வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்ட நடிகை.. பகீர் வீடியோஒரு கையில் விஷம்.. மறு கையில் செல்பி.. வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்ட நடிகை.. பகீர் வீடியோ

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

இதையடுத்து, சிகிச்சைக்காக இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் நவாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது... அங்கு தொடர்ந்து சிகிச்சை தந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தது.

போட்டோ

போட்டோ

இந்நிலையில், ஒரு போட்டோ வெளியாகி உள்ளது.. அதில், லண்டனில் ஒரு ஓட்டலில் நவாஸ் குடும்பத்துடன் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருக்கிறர்.. பார்ப்பதற்கு ஒன்றும் நோயாளி போல தெரியவே இல்லை.. ஏற்கனவே சிகிச்சை பெற்றவர் என்பதுபோலகூட தெரியவில்லை.. ஒரு தொப்பி, கண்ணாடி என ஹேண்ட்ஸம் லுக்குடன் இருக்கிறார்.

நோயாளி

நோயாளி

தொற்று அதிகம் என்று சொல்லப்பட்டு வரும் லண்டனில், இவர் மாஸ்க்கூட போடாமல் உட்கார்ந்திருக்கிறார்.. இவருடன் இருப்பவர்களே மாஸ்க் அணிந்துள்ளபோது, வயதானவர், அதிலும் நோயாளி என்று சொல்லப்படக்கூடிய நவாஸ் மட்டும் மாஸ்க் போடாமல் உள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் படு கேஷுவலாக உட்கார்ந்து அந்த டீயை குடித்து கொண்டிருக்கிறார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியானதும் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.. உடனே அவரை கைது செய்து பாகிஸ்தான் அழைத்து வர வேண்டும் என்றும், ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த டீ குடிக்கும் போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English summary
nawaz sharif’s photo having tea in london hotel goes viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X