லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெருந்தொகை.. தப்பி செல்ல வாய்ப்பு இருக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு

    லண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்து கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.

    பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பெற்றனர் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் இவரது உறவினர் மெகுல் சோக்ஸி. இந்த நிலையில் அந்த கடன்களை வங்கிகள் திருப்பி கேட்ட போது அதை செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த ஆண்டு நீரவ் மோடி தப்பி ஓடிவிட்டார்.

     Nirav Modi arrested in London, to be produced in court

    இதையடுத்து தலைமறைவாகியுள்ள அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்தது. இந்நிலையில் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்தது.

    அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல் அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்

    அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவர் மீதான வழக்கு விசாரணை வரும் மார்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் நீரவ் மோடி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் வரும் 29-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் பெருந்தொகையை மோசடி செய்துள்ளார் நீரவ் மோடி. அவர் தப்பிச் செல்ல அதிகம் வாய்ப்புள்ளதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    English summary
    Nirav Modi arrested in London and will be produced before UK Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X