லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் பெறுகிறார்

Google Oneindia Tamil News

லண்டன்: 2020ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் பெறுகிறார்.

பல துறையை சேர்ந்தவர்களுக்கும், 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

Nobel Prize in Literature is awarded to the American poet Louise Glück

லூயிஸ் க்ளூக் 1968 ஆம் ஆண்டில் Firstborn புத்தகத்தின் மூலம் அறிமுகமானார். விரைவில் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டு பெறுமளவுக்கு உயர்ந்தார். இவ்வாறு நோபல் பரிசு குழு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளூக்கின் மிகவும் புகழ்பெற்ற தொகுப்புகளில் ஒன்றான, 'தி வைல்ட் ஐரிஸ்' 1992ம் ஆண்டு வெளியானது. 'ஸ்னோ டிராப்ஸ்' கவிதையில் குளிர்காலத்திற்குப் பிறகு அற்புதமான வாழ்க்கை திரும்புவதை அவர் அழகாக விவரித்திருப்பார்.

டிஎன்ஏவில் 'கத்திரி' போட்டு மாற்றம் செய்து சாதனை: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுடிஎன்ஏவில் 'கத்திரி' போட்டு மாற்றம் செய்து சாதனை: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

லூயிஸ் க்ளூக் 1943 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் பிறந்தார், மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். எழுத்து உலகத்தை தவிர, கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக உள்ளார்.

English summary
The 2020 Nobel Prize in Literature is awarded to the American poet Louise Glück “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X