லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாபத்திற்கு ஆசைப்பட்டு.. ஐரோப்பாவுக்கு பதில் மற்ற நாடுகளுக்கு..தடுப்பூசி அனுப்பும் அஸ்ட்ராஜெனகா?

Google Oneindia Tamil News

லண்டன்: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி நிறுவனம் லாபத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பதில் மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. உருமாறிய கொரோனா குறித்த தகவல்களும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், கொரோனா தடுப்பூசி மட்டுமே இதற்கான ஒரே தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதியளித்துள்ளன.

அதிலும் குறிப்பாக, பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஸ்வீடனை நாட்டை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கினர். இந்தத் தடுப்பூசியின் அவரசகால பயன்பாட்டிற்குப் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் அனுமதி அளித்திருந்தன.

மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி

மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி

மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் சுமார் 1.7 கோடி தடுப்பூசி டோஸ்களை ஆர்டர் அளித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.

உற்பத்தி குறைவு

உற்பத்தி குறைவு

முன்னதாக இது குறித்து அஸ்ட்ரா ஜெனகா வெளியிட்ட அறிக்கையில், "எங்களால் எதிர்பார்த்த அளவு கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க முடியவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தேவையான கொரோனா தடுப்பூசியைச் சொன்னபடி எங்களால் அளிக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் அளித்த ஆர்டர்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை எங்கு அனுப்பப்படுகின்ற என்பதை உடனடியாக அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

லாபத்திற்காக விற்கவில்லை

லாபத்திற்காக விற்கவில்லை

இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத் தலைவர், "தடுப்பூசி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு பேசுகின்றனர். இங்கிருக்கும் சிக்கலைக் களைய நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். ஒன்றை மட்டும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் லாபத்திற்காக எந்த நாட்டிற்கும் கூடுதல் விலைக்குத் தடுப்பூசிகளை விற்பனை செய்யவில்லை" என்றார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தடுப்பூசி விரைவில் வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விரைவில் அனுமதி

விரைவில் அனுமதி

ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிக்கு இன்னும் அனுமதிகூட அளிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அனுமதி கிடைத்த மறுநாளிலிருந்தே தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள அந்நாடுகள் திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே முன்கூட்டியே தடுப்பூசிகளை வாங்கி வைக்க அந்நாடுகள் முனைப்பு காட்டுகின்றன.

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி

ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அஸ்ட்ரா ஜெனகா உருவாக்கியுள்ள தடுப்பூசி குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியது. அதேபோல, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் போல இவை மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்கத் தேவையில்லை. எனவே, இந்தத் தடுப்பூசியே உலகெங்கும் அதிகம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
AstraZeneca's CEO insisted Tuesday that the company was not selling vaccines ordered by the European Union to other countries at a profit, after delayed orders sparked fury from EU leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X