லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது சார்லஸுக்கு கொரோனாவை தொற்றியது "கனிகாவா"?.. இப்ப வைரலாகும் பழைய போட்டோஸ்!

Google Oneindia Tamil News

லண்டன்: இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவை தொற்றிவிட்டது கனிகா கபூர்தான் என வதந்தி பரவி வருகிறது. வதந்திக்கு சாட்சியாக இருவரும் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

    Singer Kanika Kapoor tested Positive

    உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் கனிகா கபூர். பாலிவுட் படங்களில் பாடி வருகிறார். இவர் லண்டனுக்கு சென்றுவிட்டு மார்ச் 9-ஆம் தேதி இந்தியா வந்தார். ஆனால் தான் லண்டன் சென்றதை மறைத்துவிட்டு 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலிலும் தங்கியிருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்துவிட்டு இறுதியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தார்.

    கொரோனா.. பெண்கள், முதியவர்களுக்கு சிறப்பு உதவி தொகை.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கொரோனா.. பெண்கள், முதியவர்களுக்கு சிறப்பு உதவி தொகை.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    புகார்கள்

    புகார்கள்

    அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். இவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏசியுடன் கூடிய தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் அவர் தான் ஒரு நோயாளி என்பதை மறந்துவிட்டு ஏதோ ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியுள்ளது போல் நடந்து கொள்கிறார் என மருத்துவமனை புகார்களை அளித்தது.

    பரவல்

    பரவல்

    இந்த நிலையில் இவருக்கு மூன்று முறை சோதனை நடத்தியும் இவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அண்மையில் லண்டன் சென்றிருந்த கனிகா, இளவரசர் சார்லஸை ஒரு விழாவில் சந்தித்து பேசியுள்ளதால் அவர் மூலம் இளவரசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என பரவலாக வதந்திகள் கூறப்படுகின்றன.

    ஓரிரு வார்த்தைகள்

    ஓரிரு வார்த்தைகள்

    வேலிக்கு ஓணான் சாட்சி என்பதை போல இந்த பொய்யை நம்ப வைக்க இருவரும் பேசும் சில புகைப்படங்களும் உலா வருகின்றன. அந்த புகைப்படங்கள் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. அதாவது அவை 2015 ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டது. லண்டன் அரண்மனையில் நடந்த ஒரு அறக்கட்டளைக்கு நிதி சேகரிக்கும் விழாவின் போது சார்லஸை பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார்.

    வதந்தி

    வதந்தி

    எனவே தற்போது வெளியாகும் புகைப்படங்கள் தவறானவை. வதந்தியாகும். அண்மையில் லண்டன் சென்றிருந்த கனிகா, சார்லஸை சந்தித்தாரா என தெரியவில்லை. எனினும் கனிகாவே விளக்கமளித்தால்தான் உண்மை தெரியவரும். என்னதான் கொரோனா குறித்து வதந்தி கிளப்பாதீர் என அரசு கூறினாலும் நம்மாட்கள் கேட்பதே இல்லை.

    English summary
    Old pictures of Kanika Kapoor with Prince Charles goes viral after he had tested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X