கவனம்.. ஓமிக்ரான் தாக்கிய 5வது நாள்.. உடலில் ஏற்படும் மாற்றம்- யு.கே எக்ஸ்பர்ட்ஸ் விடுத்த எச்சரிக்கை
லண்டன்: ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் எப்போது வைரல் லோட் அதிகம் ஆகும் என்று யு.கே மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வைரல் லோட் என்பது உடலில் இருக்கும் வைரஸின் அளவு ஆகும்.
உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவல் காரணமாக தனிமைப்படுத்தும் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு ஓமிக்ரான் தீவிரமாக உடலில் இருப்பது இல்லை என்பதால் பாசிட்டிவ் ஆன நபர்களை தனிமைப்படுத்தும் நாட்கள் தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பின் கோவில்கள் திறப்பு - பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
உதாரணமாக யு.கேவில் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தினால் போதும். முன்பெல்லாம் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இனி அப்படி இல்லை.

வைரல் லோட்
அதேபோல் இங்கிலாந்தில் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தினால் போதும். யு.கேவில் இருக்கும் மற்ற சில நாடுகளும் இதேபோன்ற தளர்வுகளை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓமிக்ரான் கேஸ்கள் தீவிரமாக இல்லை. இதனால் வைரல் லோட் உடலில் குறைவாக உள்ளது. இதனால் பரவல் அதிகம் இல்லை. அதனால் தனிமைப்படுத்தும் விதிகள் தளர்த்தப்படுவதாக பல்வேறு உலக நாடுகள் அறிவித்துள்ளது.

ஓமிக்ரான் மைல்டா?
அதாவது ஓமிக்ரான் கேஸ்கள் எல்லாம் மைல்டு கேஸ்கள் என்று பல்வேறு உலக நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது மைல்ட்டாக இருந்தாலும் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வேகமாக பரவுகிறது. மக்கள் இடையே காட்டு தீ போல ஓமிக்ரான் பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் விதிகளை மாற்ற வேண்டும் என்று யு.கே மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி கட்டுரையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆய்வு சொல்வது என்ன?
யு.கேவை சேர்ந்த பெரிய மருத்துவர் குழு ஒன்று உலகம் முழுக்க பல நாடுகளில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சோதனை செய்துள்ளனர். இதை வைத்து 79 ஆய்வு கட்டுரைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு science direct என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஒருவரை ஓமிக்ரான் தாக்கி சராசரியாக 5வது நாளில்தான் உடலில் அது தீவிரம் அடைகிறது. 5வது நாளில்தான் உடலில் வைரல் லோட் அதிகமாக இருக்கிறது.

வைரல் லோட்
அதாவது 5வது நாளுக்கு பின்பும் கூட ஓமிக்ரான் நோயாளி ஒருவர் இன்னொருவருக்கு ஓமிக்ரானை பரப்ப முடியும். வெளியில் பார்க்க அந்த நபர் குணமடைந்தது போல இருக்கலாம். கேஸ் மைல்டாக இருப்பதால் குணமடைந்தது போல இருக்கலாம். ஆனாலும் அவரின் உடலில் வைரல் லோட் இருப்பதால் அவரால் கொரோனாவை பரப்ப முடியும் என்று கூறியுள்ளனர். சிலருக்கு 8-9 நாட்கள் கூட உடலில் வைரல் லோட் அதிகம் இருந்துள்ளது.

மற்ற சில ஆய்வுகள்
இந்த ஆய்வு முடிவில் சரியாக 10வது நாளில்தான் உடலில் வைரல் லோட் மொத்தமாக குறைந்துள்ளது. அதாவது 10வது நாளில்தான் ஒருவர் ஓமிக்ரானை பரப்பாத அளவிற்கு பாதுகாப்பான நபராக மாறுவார். எனவே குறைந்தது 10 நாட்களாவது ஓமிக்ரான் நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு கட்டுரை அறிவுறுத்தி உள்ளது. ஜப்பான் மற்றும் University of Exeter ஆகியவை நடத்திய ஆய்வுகளும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளது.

மாற்ற வேண்டும்
எனவே இதற்கு ஏற்றபடி உலக நாடுகள் தனிமைப்படுத்தும் விதிகளை மாற்ற வேண்டும் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. தனிமைப்படுத்தும் விதிகள் 5 நாட்களாக இருப்பது சரியாக இருக்காது. இதனால் ஓமிக்ரான் கேஸ்கள் மேலும் பரவலாம். 5வது நாளில்தான் உடலில் வைரல் லோட் அதிகம் இருக்கிறது. இதனால் எந்நெந்த நாடுகளில் குறைந்த தனிமைப்படுத்தும் விதிகள் உள்ளதோ அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று யு,கே மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.