லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி.. வெளியானது அசத்தல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முதல் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1077 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு தடுப்பாற்றல் கிடைத்துள்ளது.

Recommended Video

    Oxford covid vaccine| முதல்கட்ட சோதனை வெற்றி| Oneindia Tamil

    உலகில் சுமார் 140 நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான சோதனைக் கட்டங்களில் அவை உள்ளன.

    இதில், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்து வரும் கொரோனா தடுப்பூசி, பணிகளில் நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

    3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்! 3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்!

    தடுப்பூசி

    தடுப்பூசி

    இந்த நிலையில்தான், 'லேன்செட்' (Lancet) என்ற பிரபல மருத்துவத்துறை இதழின், ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்டன், கொரோனா தடுப்பூசி தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட ஒரு தகவல் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாளை. தடுப்பூசி. சும்மா சொல்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அவர் எந்த தடுப்பூசியை சொல்கிறார், யார் தயாரிக்கும் தடுப்பூசியை சொல்கிறார் என்ற விவரத்தை கூறாவிட்டாலும், அது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி என உலகம் முழுக்க பேச்சு அடிபடத் தொடங்கியது.

    வெளியான அறிவிப்பு

    வெளியான அறிவிப்பு

    இந்த நிலையில், இந்த தடுப்பூசி "பாதுகாப்பானது" மற்றும் "நன்கு பொருந்திப்போகக்கூடியது" என்று கண்டறியப்பட்டுள்ளது என ரிச்சர்ட் ஹார்டன் இன்று ட்வீட் செய்துள்ளார். "ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் 1/2 கட்ட சோதனை முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடியது (well-tolerated) மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டது. ஃபெர்டோபொலேகாட்டி மற்றும் சகாக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன" இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார். 1077 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனர்.

    பல நிறுவனங்கள்

    பல நிறுவனங்கள்

    பிரேசிலில் 3வது கட்ட தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் சீன நிறுவனமான, சினோவக் பயோடெக் ஈடுபட்டுக் கொண்டு உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்/அஸ்ட்ராஜெனேகா, இணைந்து, பிரிட்டனில் 2 மற்றும் 3வது டிரையல் அளவில் தடுப்பூசி ஆய்வு பணியில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் இவை 3வது கட்ட டிரையலில் உள்ளன.

     தடுப்பூசி நடைமுறை இதுதான்

    தடுப்பூசி நடைமுறை இதுதான்

    தடுப்பூசி சோதனை என்பது நான்கு கட்ட செயல்முறை கொண்டது. ப்ரீ கிளினிக்கல் டெஸ்ட் என்பது விலங்குகள் மீது பரிசோதிக்கப்படும் நடைமுறையாகும். முதல்கட்டமாக தடுப்பூசி பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறிய அளவிலான மக்கள் குழுவிற்கு தடுப்பூசி கொடுக்கப்படும். அந்த தடுப்பூசி உருவாக்கும், நோயெதிர்ப்பு சக்தியை மேலும் அறிய, 2ம் கட்டமாக சோதனைகள் விரிவாக்கப்படும். மூன்றாம் கட்ட சோதனை அதிக அளவு மக்களுக்கு செய்து பார்க்கப்படும். தடுப்பூசியின் செயல்திறனை உறுதிப்படுத்த இது உதவும். இதுதான் மூன்றாம் கட்ட டிரையல் என அழைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. ஆக மொத்தம், விலங்குகளுக்கு செய்யப்படும் சோதனையோடு சேர்த்தால், ஒரு தடுப்பூசி, நான்கு கட்ட செயல்முறையை தாண்டி வருகிறது.

    தடுப்பூசியே ஒரே வழி

    தடுப்பூசியே ஒரே வழி

    உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு காரணமாக, சுமார் 6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். எனவே, கொரோனாவை தடுக்க ஒரே உபாயமாக தடுப்பூசிதான் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Editor of medical journal The Lancet announced on Twitter that he is going to announce the results of the Oxford Covid-19 vaccine study.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X