லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வேக்சின்.. ஒரு ரூபாய் லாபம் வேண்டாம்.. உலக மக்களுக்காக ஆக்ஸ்போர்ட் எடுத்த அதிரடி முடிவு.. செம

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு எந்த விதமான லாபமும் பார்க்காமல் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் லாபம் நோக்கம் இன்றிசெய்யப்பட்டு உள்ளது.

Recommended Video

    Oxford-AstraZeneca Corona Vaccine : 3 Important Updates | Oneindia Tamil

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனையில் தற்போது மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

    ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்புகொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

    வெற்றி பெற்றது

    வெற்றி பெற்றது

    இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை வெற்றிபெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மனிதர்களிடம் செய்யப்பட்ட சோதனையில், இந்த மருந்து கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதாகவும். இதன் பயன் நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்றும் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் தெரிவித்துள்ளது. உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி மற்றும் டி - செல்களை இந்த மருந்து கொரோனாவிற்கு எதிராக தூண்டிவிட்டு, கொரோனா செல்களை அழிக்கிறது.

    நீண்ட நாள் இருக்கும்

    நீண்ட நாள் இருக்கும்

    இந்த தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டால் அதன் பயன் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இது எதிர்ப்பு சக்தி செல்களான கில்லர் செல்கள் என்று அழைக்கப்படும் டி செல்களை தூண்டி விடுகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு இந்த தடுப்பு மருந்து பலன் அளிக்கும். அதேபோல் இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் எதிலுமே இந்த AZD1222 மருந்து பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    பொதுவாக ஒரு மருந்து உருவாக்கப்படும் சமயத்தில், அதை உருவாக்கும் நிறுவனம் அதற்கான காப்புரிமையை பெறும். அதன்பின், அந்த மருந்தை தயாரிக்க (குறிப்பிட்ட அளவு டோஸ்களை தயாரிக்க மட்டும்) பிற நாடுகளுக்கு அனுமதி கொடுக்கும். இதற்கான தொகையை அந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும். இதன் மூலம்தான் பார்மா கார்ப்பரேட் உலகங்கள் செயல்பட்டுக்கு கொண்டு இருக்கிறது. கோடி கோடியாக லாபம் ஈட்டப்படுகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் தற்போது இந்த மருந்தின் தொடக்க கால உற்பத்தியை லாபம் இன்றி செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு 6 கோடி மருந்துகளை எதிர்காலத்தில் அனுப்ப உள்ளது. எதிர்காலத்தில் என்றால், மருந்து மொத்தமாக சோதனைகளை கடந்த பின். அதேபோல் பிரிட்டனுக்கு 10 கோடி மருந்துகளை அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டன் மக்கள் தொகையே 6 கோடிதான் என்பது வேறு கதை.

    இலவசமாக வழங்கும்

    இலவசமாக வழங்கும்

    உலகம் முழுக்க 40 கோடி மருந்துகளை ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் தனியாக தயாரித்து அனுப்ப உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் இந்த தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு எந்த விதமான லாபமும் பார்க்காமல் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் லாப நோக்கம் இன்றி செய்யப்பட்டு உள்ளது.

    திட்டம் செம

    திட்டம் செம

    அதன்படி உலக நாடுகளுக்கு எந்த விதமான லாப நோக்கமும் இன்றி இந்த மருந்தை கொடுக்க போகிறோம். மிக குறைவான அளவு உற்பத்தி கட்டணம் மட்டுமே வசூலிக்க போகிறோம். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் முடியும் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம். எதிர்காலத்தில் விலை உயர்த்துவதை குறித்து பேசிக்கொள்ளலாம் என்று ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உதவி மற்ற நிறுவனம்

    உதவி மற்ற நிறுவனம்

    இதற்காக மற்ற பார்மா நிறுவனங்கள்,உலக நாடுகளிடம் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் உதவியும் கேட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மருந்து சென்று சேர வேண்டும். மிக குறைவான விலையில் மருந்து சென்ற சேர வேண்டும். அதற்காக நாங்கள் இதை குறைந்த விலையில் லாபம் இன்றி விற்க போகிறோம் என்று ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் முடிவு செய்துள்ளது. அவர்களின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Oxford Covid Vaccine: AstraZeneca to sale the doses with no profit to countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X