லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேஷ் பேஷ்.. இளைஞர்கள், முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதாம் ஆக்ஸ்போர்ட் வாக்சின்!

ஆக்ஸ்போர்ட் வாக்சின் தொடர்பான செய்தியை அஸ்ட்ரஜெனகாதெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

லண்டன்: ஆக்ஸ்போர்ட் வாக்சின் தொடர்பான மகிழ்ச்சி செய்தியை அஸ்ட்ரஜெனகா தெரிவித்துள்ளது. அதாவது இளைஞர்கள், முதியோரிடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை சரியான முறையில் அது தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரஜெனகா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் வாக்சின், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகிறது.

Oxford Covid vaccine prompting immune response in young, old: AstraZeneca

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் அஸ்ட்ரஜெனகா. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த வாக்சினை தயாரித்து அதை பரிசோதனை செய்து வருகிறது இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வாக்சினுக்கு ChAdOx1 என்று பெயர்.

இடையில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக சோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அக்டோபர் 22ம் தேதி முதல் உலக அளவில் இந்த சோதனை மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சோதனையின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து அஸ்ட்ரஜெனகா செய்தித் தொடர்பாளர் சொல்லும்போது, வயதானவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த தடுப்பு மருந்தானது நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக தூண்டி விடுகிறது. அதேசமயம், மிகவும் வயதானவர்களிடம் இது சற்று குறைவாகவே உள்ளது.

எரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்!எரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்!

இதுதொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு (அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை, அடையாள எண் AZD1222) நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே தூண்டப்பட்டது" என்றார் அவர். இவரது இந்த கூற்று முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும் உகந்ததாக இந்த வாக்சின் விளங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது, நம்பிக்கையும் கூடியுள்ளது.. காரணம் முதியோர்கள் பலர் உயிரிழப்பதை இது தடுக்க முடியும் என்பதால்.

கடந்த ஜனவரி முதல் இந்த வாக்சின் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸின் பலவீனமான வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த வாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த வைரஸ் சோதனையில் இந்தியாவும் இணைந்துள்ளது.. இந்தியாவில் இந்த சோதனையை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது.

English summary
Oxford Covid vaccine prompting immune response in young, old: AstraZeneca
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X