லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ஹேப்பி நியூஸ்.. ஆக்ஸ்போர்டு தயாரித்த கொரோனா தடுப்பூசி சக்சஸ்.. குரங்குகள் உடலில் வேலை செய்கிறது

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரஸை ஒழித்துக்கட்ட, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 கடந்த ஒரு வாரமாக மனிதர்களிடையே சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக, குரங்குகள் உடலில் இது செலுத்தப்பட்டிருந்தது. அந்த பரிசோதனை வெற்றிகரமாக பலன் கொடுத்துள்ளது.

Recommended Video

    ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி...குரங்குகள் உடலில் வேலை செய்கிறது

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் 'ChAdOx1 nCoV-19' கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளை செய்ய இங்கிலாந்து அரசு 20 மில்லியன் பவுண்டுகள் வழங்கியுள்ளது.

    ஆக்ஸ்போர்டு குழு, மே மாத இறுதிக்குள், 6,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்க திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

    ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பு மருந்து- நாளை முதல் மனிதர்களிடம் பரிசோதனை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பு மருந்து- நாளை முதல் மனிதர்களிடம் பரிசோதனை: இங்கிலாந்து

    குரங்குகள்

    குரங்குகள்

    தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியுள்ளதை பாருங்கள். ஆக்ஸ்போர்டு குழுவின் தடுப்பூசி முயற்சி என்பது உலகெங்கிலும் நடைபெறும், இதேபோன்ற ஆராய்ச்சி முயற்சிகளுடன் ஒப்பிடும்போது, மிக வேகமாக உள்ளது. ஆக்ஸ்போர்டு குழு உருவாக்கிய தடுப்பூசி, ரீசஸ் மாகேக் குரங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளது.

    சக்சஸ்

    சக்சஸ்

    மொன்டானாவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனங்களின் ராக்கி மவுன்டைன் ஆய்வகத்தில் மார்ச் மாதம் ஆறு ரீசஸ் மாகேக் குரங்குகள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அந்த குரங்குகள் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் இடத்தில் விடப்பட்டன. ஆனால் 28 நாட்களுக்கு மேலாக, ஆறு குரங்குகளும் ஆரோக்கியமாக உள்ளன. இவ்வாறு சோதனையை நடத்திய ஆராய்ச்சியாளர் வின்சென்ட் மன்ஸ்டர் தி நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார். ரீசஸ் மா கேக் வகை குரங்குகள், மனிதர்களின் ஜீன்களுக்கு நெருக்கமான ஜீன்களை கொண்ட குரங்குகள். என்று மன்ஸ்டர் கூறினார்.

    மிக மிக விரைவான திட்டம்

    மிக மிக விரைவான திட்டம்

    குரங்குகளில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கும், இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், இந்த தடுப்பூசியின் பலன்கள், ஆக்ஸ்போர்டு முயற்சியில் உத்வேகத்தை அதிகரித்துள்ளன. இதுகுறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தடுப்பூசி திட்டத்தின் இயக்குனர் எமிலியோ எமினி, தி நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், ஆக்ஸ்போர்டு திட்டம் "மிக மிக விரைவான மருத்துவ திட்டம்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த தடுப்பூசி, முழுமையாக, சக்சஸ் ஆனால், செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நிறுவனம்

    இந்திய நிறுவனம்

    மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், தடுப்பூசி தயாரிக்க, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய நாட்டின், செரம் நிறுவனம். செரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா இதுகுறித்து, கூறுகையில், எங்கள் நிறுவனம் முதல் 6 மாதங்களுக்கு மாதத்திற்கு 5 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும், அதைத் தொடர்ந்து, உற்பத்தியை மாதத்திற்கு 10 மில்லியன் டோஸாக உயர்த்துவோம் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    பல தடுப்பூசிகள் தேவை

    பல தடுப்பூசிகள் தேவை

    அதேநேரம், வெவ்வேறு தடுப்பூசிகள் வெவ்வேறு வயதினருக்கு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துவதால் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் அவசியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பல வகை தடுப்பூசிகள் வருகை தந்தால், சப்ளை அதிகமாக இருக்கும் என்பதால், எல்லா மக்களுக்கும், தடுப்பூசி கிடைக்கும் என்றும் மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தடுப்பூசி செயல்படும் விதம்

    தடுப்பூசி செயல்படும் விதம்

    ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸ் போன்ற தோற்றத்தை மனித உடலுக்குள் செலுத்தி, மனித நோய் எதிர்ப்பு சக்தியை, அதை அழிக்க பழக்கப்படுத்தும் டெக்னிக் ஆகும். எனவே, கொரோனா வைரஸ் மனித உடலை தாக்கினாலும், ஏற்கனவே அது போன்ற வைரசை தாக்கி அழித்த நினைவுகளை மனித நோய் எதிர்ப்பு சக்தி வைத்திருக்கும் என்பதால், எளிதாக கொரோனா வைரசை விரட்டியடித்துவிடும் என்பதுதான், இந்த தடுப்பூசியின் டெக்னிக் ஆகும்.

    English summary
    The UK government had pledged 20 million pounds to support 'ChAdOx1 nCoV-19' coronavirus vaccine trials by Oxford University's Jenner Institute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X