லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முந்திக் கொண்ட ஆக்ஸ்போர்டு... இன்று கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பா?

Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்காவின் மொடேர்னாவைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனையின் இறுதிக் கட்டத்தை முடித்துள்ளதாகவும் இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Recommended Video

    Corona vaccine : Oxford இன்று முக்கிய அறிவிப்பு?

    அமெரிக்காவில் இருக்கும் மொடேர்னா நிறுவனம்தான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முதல் ஆய்வில் இறங்கியது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆய்வில் இறங்கின. RNA-1273 என்ற பெயரில் மார்ச் 16ஆம் தேதி பரிசோதனை மேற்கொண்டது. மரபணு முறையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித செல்களுக்கு புரோட்டீன் செலுத்தி, வைரஸை எதிர்க்கும் முறையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த ஜூலை 27ஆம் தேதி துவங்கியது.

    Oxford University may announced its vaccine for coronavirus today

    இதையடுத்து பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ChAdOx1 nCoV-19 என்று தடுப்பு மருந்து ஆய்வில் இறங்கியது. இந்த தடுப்பு மருந்து புரோட்டீன் அடிப்படையில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட ஆய்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை. இந்த ஆய்வில் மூன்று கட்டங்களாக ஆய்வு செய்யப்படுகிறது. முதலில் பொதுவான பாதகங்களை உருவாக்கும் எதிர்திறன், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் திறன், மூன்றாவது பாதுகாப்பு.

    இந்த ஆய்வில் 15 பேருக்கு முதல் கட்டமாக 25 மைக்ரோகிராம் மருந்தும், அடுத்த 15 பேருக்கு 100 மைக்ரோகிராம் மருந்தும், அடுத்த 15 பேருக்கு 250 மைக்ரோகிராம் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளில் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதில் 250 மைக்ரோகிராம் ஆய்வில் நல்ல எதிர்ப்பு திறன் கிடைத்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு 100 மைக்ரோகிராம் மருந்தும் செலுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த பரிசோதனை ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிப்பேருக்கு சிறிய அளவில் தலைசுற்றல், உடலில் குளிர்ச்சி, தலைவலி, ஊசி போட்ட இடத்தில் வலி ஆகியவை இருந்துள்ளது.

    இந்த ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதால், விரைவில் சாதகமான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று ஐடிவி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டத்தில், பெரியவர்களுக்கு இந்த மருந்து எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது, பெரிய மக்கள் தொகைக்கு இந்த மருந்தை செலுத்துவதால், பாதிப்பு இருக்குமா ஆகிய ஆய்வுகளில் தற்போது ஆக்ஸ்போர்டு ஈடுபட்டுள்ளது. இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால் எத்தனை நாட்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

    கர்நாடகாவில் தாண்டவமாடும் கொரோனா.. இனி கடவுள்தான் காப்பாற்றனும்.. கை விரித்த சுகாதாரத்துறை அமைச்சர்கர்நாடகாவில் தாண்டவமாடும் கொரோனா.. இனி கடவுள்தான் காப்பாற்றனும்.. கை விரித்த சுகாதாரத்துறை அமைச்சர்

    இதற்கு முன்னதாக சீனாவின் சைனோவேக் நிறுவனம் பிரேசில் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு ஊசி கண்டுபிடித்துள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனையும் முடிந்து நடப்பாண்டின் இறுதியில் மனிதர்களுக்கு போடப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சீனா மற்றும் பிரேசிலில் இருக்கும் 400 ராணுவ வீரர்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு கட்ட சோதனைகளில் எந்த பாதகமும் பரிசோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்படவில்லை என்று பிரேசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில்தான் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நிறுவனம் இன்று தடுப்பு மருந்து தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் தனது ட்விட்டர் பதிவில் ''கிரேட் நியூஸ் ஆன் வேக்சின்'' என்று பதிவிட்டு இருந்தார்.

    English summary
    Corona Vaccine: Oxford may announce today; it may release its preliminary data july end
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X