லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு

Google Oneindia Tamil News

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குரங்குகளுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து 6 ரீசஸ் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன. தடுப்பு மருந்தின் ஒப்பீடுதலுக்காக தடுப்பூசி போடாமல் 3 குரங்குகளுக்கு வைரஸ் கிருமியை விஞ்ஞானிகள் செலுத்தினர்.

இந்த குரங்குகள் அனைத்தும் 7 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது முதல் இந்த தடுப்பு மருந்து மனித மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது.

பேருந்து வசதியின்றி அவதிப்படும் அரசு ஊழியர்கள்... கூடுதலாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கைபேருந்து வசதியின்றி அவதிப்படும் அரசு ஊழியர்கள்... கூடுதலாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுவாச பாதை

சுவாச பாதை

தடுப்பூசி போடப்படாத 3 குரங்குகளுக்கு எவ்வளவு கொரோனா வைரஸ் இருந்ததோ அதே அளவுக்கு தடுப்பூசி போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் இருந்தது. இந்த குரங்குகளுக்கு சுவாச பாதைகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளுக்கும் எளிதாக மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்ப முடியும்.

விலங்குகள்

விலங்குகள்

ஆனால் அதே வேளையில் இந்த தடுப்பூசிகள் குரங்குகளின் நுரையீரல் திசுக்களில் ஏற்படும் நிமோனியா அல்லது மற்ற அழற்சி நோய்களே இல்லாமல் செய்துவிட்டது. இதன் மூலம் ChAdOx1 nCoV-19 மருந்து நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் வல்லமையுடன் செயல்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அனைத்து விலங்குகளிலும் இந்த ChAdOx1 nCoV-19 தடுப்பு மருந்து நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

மூக்குகள்

மூக்குகள்

இதுகுறித்து விஞ்ஞானி ஜோனத்தான் பால் கூறுகையில் தடுப்பு மருந்து போடப்பட்ட குரங்குகளின் மூக்குகளிலும் தடுப்பு மருந்தே போடப்படாத குரங்குகளின் மூக்குகளிலும் ஒரே மாதிரி அளவுடைய வைரஸ் இருப்பது கவலையை அளிக்கிறது. இது போல் தடுப்பூசி போடப்படும் மனிதர்களுக்கும் கொரோனா தொற்று மேலும் ஏற்படும். இது சமூக பரவலுக்கும் வழி வகுக்கும் என்றார்.

மனிதர்கள்

மனிதர்கள்

இதுகுறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எலினோர் ரிலே கூறுகையில், தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்கும் அளவிலோ, அவர்கள் மற்றவர்களுக்கு நோயை பரப்புவதிலிருந்தோ தடுக்கும் அளவில் இல்லை. இதே போன்ற விளைவு மனிதர்களிலும் ஏற்பட்டால் இந்த தடுப்பூசியால் பகுதியளவே கொரோனாவிடமிருந்து பாதுகாக்க முடியும். அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறையாது என்றார்.

English summary
Oxford Covid vaccine fails to prevent monkeys from Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X