லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தி தாத்தா போட்ட தங்க பிரேம் மூக்கு கண்ணாடிகள்.. அடேங்கப்பா அதிக விலைக்கு ஏலம் போய்.. அபார சாதனை!

Google Oneindia Tamil News

லண்டன்: தகதகவென கோல்ட் பிரேம் போடப்பட்ட காந்தியின் 2 மூக்குக் கண்ணாடிகளை இங்கிலாந்தில் ஏலத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.. அந்த கண்ணாடிகள், 2,60,000 பவுண்டு தொகைக்கு அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 55 லட்சம் அளவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதாம்.. இந்த மூக்கு கண்ணாடியின் ஏல தொகையை கேட்டு உலக நாடுகளே மூக்கின் மீது விரலை வைத்து வருகின்றன!

Recommended Video

    Rajiv Gandhi Khel Ratna Award for Rohit Sharma and Mariappan Thangavelu | ONEINDIA TAMIL

    மகாத்மாவை நினைக்கும்போதெல்லாம், பொக்கைவாய் சிரிப்புடன் கூடவே நம் கண் முன் வந்து நிற்பது அவரது கண்ணாடிதான்.. அது ஒரு ஸ்டைலான கண்ணாடி.. நல்லா வட்டமா இருக்கும்... இரண்டு பக்கமும் மெல்லிய கம்பி கட்டி போட்டிருப்பார். இந்தக் கண்ணாடிதான் காந்தியின் முக்கிய அடையாளமே.

    காந்தி, 45 வருஷங்கள் கண்ணாடி அணியாமல்தான் இருந்திருக்கிறார்.. முதன்முதலில் அவர் கண்ணாடியுடன் இருக்கும் கார்ட்டூன் 1920-ல் லண்டன் டைம்ஸ் பத்திரிகையில்தான் வெளியானது.. அந்த போட்டோவில் அவர் கதர் சட்டை போட்டிருப்பார்.

    இந்தியை ஓரம் கட்டும் ஆங்கிலம்.. தாய் மொழி வளர்ச்சியையும் குறைக்கிறதாம்.. ஆய்வில் திடுக் தகவல்!இந்தியை ஓரம் கட்டும் ஆங்கிலம்.. தாய் மொழி வளர்ச்சியையும் குறைக்கிறதாம்.. ஆய்வில் திடுக் தகவல்!

     முதல் கண்ணாடி

    முதல் கண்ணாடி

    எப்பவுமே நிறைய புத்தகங்களை இவர் படிப்பார்.. அதிலும் மங்கலான வெளிச்சத்தில் படிச்சதால் இவருக்கு கண் பார்வை குறைந்திருக்கிறது.. படிப்பதற்கு மட்டுமல்ல, நூல் நூற்பதற்கும் அவருக்கு ஒரு கண்ணாடி தேவைப்பட்டுள்ளது.. அப்போதெல்லாம் இந்த கண்ணாடி என்பது அறிவியல் துறையின் ஒரு புதிய கண்டுபிடிப்பாகும்.

     அடையாளம்

    அடையாளம்

    அதன்பிறகுதான் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, மூக்கு கண்ணாடி போட ஆரம்பித்துள்ளார்.. கோல்ட் முலாம் பூசிய ஃபிரேம்களைதான் பெரும்பாலும் இவர் பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. கடைசியில் அந்த மூக்கு கண்ணாடியே அவரது முக்கிய சொத்துக்களில் ஒன்றாகவும், மகாத்மாவின் அடையாளமாகவும் தங்கி போனதை மறுப்பதற்கில்லை.. அதற்கு மற்றொரு உதாரணம்தான் இந்த செய்தி!

     ஈஸ்ட் பிரிஸ்டல்

    ஈஸ்ட் பிரிஸ்டல்

    1920-ல் காந்தி தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது காந்தி தன்னுடைய மூக்கு கண்ணாடியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார்... அவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறைகளாக அந்த கண்ணாடியை பாதுகாத்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் அந்த கண்ணாடியை ஏலம் விடவும் முடிவு செய்துள்ளனர்.. அதன்படி ஈஸ்ட் பிரிஸ்டல் ஏல நிறுவனத்தின் மூலம் இது ஏலம் விடப்பட்டது.

     டாலர்கள்

    டாலர்கள்

    அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸ்டோவ் என்பவர் அதற்கான முயற்சியை சில தினங்களுக்கு முன்பு மேற்கொண்டார். அந்த கண்ணாடி 15,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என்று முதலில் கணக்கிடப்பட்டது. இதை பற்றி அவர் சொல்லும்போது, ''காந்தியிடம் ஒரு பழக்கம் இருந்தது... அதாவது தன்னிடம் ஏதாவது கூடுதலாக இருந்தால் அதை தேவைப்படுவோருக்குக் கொடுத்து விடுவார்.. அடுத்தவர்களுக்கு மனசார தரும் பழக்கம் கொண்டவர் காந்தி.. அப்படித்தான் இந்தக் கண்ணாடியையும் , தற்போது அதை விற்பனைக்குக் கொண்டு வந்தவரின் உறவினரிடம் கொடுத்துள்ளார்.

     வெறும் காகிதம்

    வெறும் காகிதம்

    இந்த கண்ணாடியை ஏலத்தில் வாங்குவதற்கு இந்தியாவில் எத்தனையோ பேர் விரும்புவார்கள்.. ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த மூக்கு கண்ணாடி எங்களிடம் வந்து சேர்ந்தது. வெறும் காகிதத்தில் இது பாதுகாக்கப்பட்டாலும், தங்கள் நிறுவனத்திலிருந்து ஏலத்திற்கு விற்பனையாகும் பொருட்களில் காந்தியின் கண்ணாடி ரொம்பவும் முக்கியமானது" என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

    விற்பனை

    விற்பனை

    காந்தியின் மூக்குக் கண்ணாடி ஆன்லைனில் ஏலத்துக்கு விடப்பட்டது.. கிழக்கு பிரஸ்டல் ஏல நிறுவனம், வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கென்றே இருக்கும் இடமாம்.. இந்த கண்ணாடி எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா? 260,000 பவுண்டு.. அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 55 லட்சம் அளவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

    மதிப்பு

    மதிப்பு

    இந்த கண்ணாடியை ஏலத்தில் எடுக்க செம போட்டி நடந்துள்ளது.. இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா என ஏகப்பட்ட நாடுகளில் இருந்து ஏலம் கேட்டார்களாம்.. கடைசியில் ஏலம் கேட்கப்பட்ட தொகையின் முடிவு உண்மையிலேயே ஸ்பெஷலானதுதான் என்று ஆண்ட்ரூ ஸ்டோவ் சொல்கிறார். அது மட்டுமல்ல, இவ்வளவு மதிப்பு மிகுந்த மகாத்மாவின் கண்ணாடியை, புதிய வீட்டுக்கு செல்வதற்காக ஒப்படைப்பது தனக்கு ஒரு கவுரவமாக கருதுவதாகவும் அவர் பெருமிதம் கொள்கிறார்.

     பெருமைகள்

    பெருமைகள்

    உண்மைதான்.... எத்தனையோ ஏலங்களை நாடுகள் பார்த்திருந்தாலும், இந்த ஏல தொகையின் மதிப்பானது, அனைத்தையும் விஞ்சி நிற்பது மகாத்மாவின் பெருமையை ஓங்கி பகர்கிறது.. காந்தி சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் சரி, அது சர்வதேச வரலாற்று முக்கியத்துவத்தின் தேடலாகவே கருதப்படுகிறது என்பதற்கு இந்த மூக்கு கண்ணாடி ஏலம் இன்னொரு உதாரணம் ஆகும்.

    English summary
    Gandhi's pair of glasses sold for Rs 2. 55 crores in UK auction
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X