லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரிட்டனில் சர்ச்சையில் சிக்கியது பதஞ்சலி! சட்டவிரோதமாக கொரோனில் மருந்தை விற்றது அம்பலம்!

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் சட்டவிரோதமாக 'கொரோனாவை தடுக்கும் எதிர்பாற்றல் கொண்டது' என பதஞ்சலியின் கொரோனாலில் மருந்து விற்பனை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகளில் படுதீவிரமாக மூழ்கி இருந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் சர்ச்சைக்குரிய பதஞ்சலி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கொரோனாவை குணப்படுத்துகிற ஆயுர்வேத மருந்தாக கொரோனில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த அறிவிப்பு.

Patanjalis Coronil on sale in London without approval

இந்த கொரோனில் தடுப்பு மருந்து, கொரோனா பாதித்தவர்களை குணமாக்கிவிட்டது என்று பதஞ்சலி நிறுவனத்தின் ராம்தேவ் அறிவித்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானது. பதஞ்சலியின் கொரோனில் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது.

கொரோனா தடுப்பூசி போட்டால் முதலையாக மாறலாம்.. பெண்களுக்கு தாடி வளருமாம- பிரேசில் அதிபரின் பீதி பேச்சுகொரோனா தடுப்பூசி போட்டால் முதலையாக மாறலாம்.. பெண்களுக்கு தாடி வளருமாம- பிரேசில் அதிபரின் பீதி பேச்சு

மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதும் தெரியவந்தது. பின்னர் கொரோனாவை தடுக்கும் எதிர்ப்பாற்றலுக்கான மருந்து என கொரோனிலை விற்பனை செய்யலாம் என மத்திய அரசு அனுமதித்தது. இந்த நிலையில் பிரிட்டனிலும் கொரோனில் மருந்து விற்பனை செய்யப்படுவதை பிபிசி செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.

பிரிட்டனில் அரசின் முறையான அனுமதி பெறாமலேயே பதஞ்சலி நிறுவனம் கொரோனிலை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் கொரோனில் மருந்தால், கொரோனா எதிர்ப்பு ஆற்றல் உருவாகும் என்பதற்கு எந்த ஒரு சான்றுமே இல்லை எனவும் பிரிட்டன் மருத்துவர்கள் திட்டவட்டமாகவும் கூறியுள்ளனர்.

English summary
Ramdev's Patanjali Coronil on sale in London without regulator's approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X