லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழுத்திலிருந்து காலை எடுங்கள்.. அமெரிக்காவை போல் இங்கிலாந்திலும் "ஜார்ஜ் பிளாய்டு" கைது சம்பவம்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கருப்பின இளைஞர் ஒருவரின் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்த போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போன்ற சம்பவம் இங்கிலாந்திலும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் கடை ஒன்றில் கள்ளநோட்டு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது அவரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் தனது முழங்காலால் அழுத்தி அவர் எழ முடியாமல் இருக்கினார். அப்போது என்னால் மூச்சுவிட முடியவில்லை என அந்த இளைஞர் மன்றாடியும் அந்த அதிகாரி காலை எடுக்காததால் ஜார்ஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

 அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.. தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.. தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு "தலைவலி"

போலீஸார்

போலீஸார்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் அதாவது கருப்பர்களின் வாழ்க்கை போராட்டம் என்ற பதாகைகளுடன் பெருந்திரளானோர் போராட்டம் நடத்தினர். இது போன்ற போலீஸாரின் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கனடா பிரதமரும் போராட்டத்தில் கலந்து கொண்டு அந்த சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் முட்டி போட்டு அமர்ந்தார்.

தகவல்

தகவல்

இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்டு கைது சம்பவம் போன்ற சம்பவம் இங்கிலாந்திலும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் லண்டனில் தெற்கு பகுதியில் இஸ்லிங்டன் என்ற பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சாலை பகுதியில் சிலர் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக கடந்த வியாழக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கு கூடியிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினார். அப்போது இருந்த கருப்பின இளைஞரிடம் கத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த நபரை இரு போலீஸார் கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அந்த நபரோ போலீஸாருக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிகிறது.

சமூகவலைதளங்களில் வைரல்

சமூகவலைதளங்களில் வைரல்

இதனால் போலீஸார் அவரை தரையில் தள்ளிவிட்டு கழுத்தில் தனது காலால் நெரித்தனர். அப்போது மூச்சுவிட முடியாமல் தவித்த அந்த இளைஞர், என் கழுத்தில் இருந்து காலை எடுங்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றார். பின்னர் காலை எடுத்த அதிகாரி அவரை கைது செய்தார். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.

Recommended Video

    V-CONNECT | LONDON - இங்க MASK தேவ இல்ல | UK LOCKDOWN நிலவரம் | ONEINDIA TAMIL
    போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

    போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

    அமெரிக்காவை போல் இங்கிலாந்திலும் இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து கருப்பின இளைஞரின் கழுத்தில் காலை வைத்து நெரித்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த மற்றொரு போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Police Officer in England suspended for kneeling on neck on Black man during suspicious arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X