லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லண்டனில் மீண்டும் போலியோ கிருமி.. ப்ளீஸ் இத செக் பண்ணுங்க.. பெற்றோருக்கு வேண்டுகோள்!

லண்டன் கழிவு நீரில் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் கழிவு நீரில் மீண்டும் போலியோ தொற்று கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவைப் போல், ஒரு கட்டத்தில் உலகையே உலுக்கிய நோய்களில் ஒன்று போலியோ. இந்த வரைஸ் தொற்று காரணமாக , பலர் கால்களை கைகளை இழந்து, மாற்றுத்திறனாளி ஆனார்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆராய்ச்சியின் பலனாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உலகின் பல நாடுகள் போலியோ தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட காரணத்தால், அதன் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து, ஒரு கட்டத்தில் பல நாடுகளில் போலியோவே இல்லாத நிலை உண்டானது.

 தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம் தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்

இந்நிலையில், லண்டனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்கு எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் வீரியம் மிகுந்த போலியோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலியோ கிருமிகள்

போலியோ கிருமிகள்

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை லண்டனில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அந்த கழிவு நீரில் வீரியம் மிக்க போலியோ தொற்று கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

மேலும், இது சமூக பரவலின் அறிகுறியாக மாறலாம் என்றும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் ஆறுதல் தரும் விசயமாக, இதுவரை அங்கு யாரும் போலியோ மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படவில்லை. மேலும், அங்குள்ளவர்கள் அனைவருக்கும் சிறுவயதிலேயே போலியோ தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

கவனம் தேவை

கவனம் தேவை

அதே சமயம், இதுவரை போலியோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், விரைவில் நாடு முழுவதும் போலியோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட வாய்ப்பு உருவாகலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளும்படி அந்நாட்டு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

போலியோ இல்லாத நாடு

போலியோ இல்லாத நாடு

இங்கிலாந்தில் கடந்த 1984ம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று மக்களிடையே கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 20 ஆண்டுகள் போலியோ தொற்று கண்டறியப்படாத சூழலில், 2003ல் போலியோ இல்லாத நாடாக இங்கிலாந்து அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு கழிவு நீரில் மீண்டும் போலியோ தொற்று கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A type of poliovirus derived from vaccines has been detected in London sewage samples, the World Health Organization and British health officials said Wednesday, adding that more analysis was underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X