லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லண்டனில் கர்ப்பிணி குத்திக் கொலை... சில மணி நேரங்களுக்கு பின் பிறந்த குழந்தையும் இறந்தது

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் கர்ப்பமாக இருந்த பெண் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிறந்த குழந்தை உயிரிழந்தது.

26 வயதான கர்ப்பிணி கெல்லி மேரி ஃபவ்ரெல்லே, தெற்கு லண்டனின் குரோய்டோன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்த விட்ட நிலையில், அவரது வயிற்றில் இருந்து ஆபரேஷன் மூலம் குழந்தை பிரித்தெடுக்கப்பட்டது. ரிலே என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

Pregnant stabbing in London; A few hours later, the newborn baby died

இதனிடையே, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த கெல்லி மேரி ஃபவ்ரெல்லே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரிலே ஆபத்தான நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தான் என்று கூறியுள்ள காவல்துறை அதிகாரி மிக் நார்மன், குற்றவாளி என்று கருதப்படும் ஒரு நபரின், சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அந்த நபர், கொலை நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு, கெல்லி மேரியின் வீட்டில் இருந்து வேகமாக ஓடிச் சென்றுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில், இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று நாங்கள் கெல்லியின் குடும்பத்திற்கு உறுதியளித்துள்ளோம். குழந்தை சிகிக்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை தருகிறது என்றார். லண்டனில் இதுவரை 67 படுகொலைகள் நடந்திருப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் இறந்த சில மணி நேரங்களுக்கு பிறகு, குறைமாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்தும், பலன் இல்லாமல் போனது கெல்லி மேரியின் குடும்பத்தாரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

English summary
Pregnant stabbing in London; the newborn baby Dies Within Days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X