லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி.. லண்டன் அரண்மனை

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக லண்டன் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் அரச குடும்பத்தினரையும் விட்டு வைக்கவில்லை என்றே தெரிகிறது.

Recommended Video

    வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்து நாடுகளையும் பதம் பார்த்து வரும் கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகளவில் பாதிப்பு இருந்தது.

    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் பிரிட்டன் அரண்மனையின் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    லண்டன்

    லண்டன்

    அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. 71 வயதான சார்லஸ் தற்போது ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதை லண்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் கூறுகையில் சார்லஸுக்கு லேசான அறிகுறிகள் இருந்தனர். எனினும் அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது.

    சார்லஸுக்கு வைரஸ்

    சார்லஸுக்கு வைரஸ்

    கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்திருந்தார். அது போல் சார்லஸின் மனைவி கமீலா பார்கெருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதையடுத்து அவரும் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டார். சார்லஸுக்கு வைரஸ் பாதிப்பு யாரிடம் இருந்து பரவியது என தெரியவில்லை.

    இளவரசர்

    இளவரசர்

    அவர் அண்மையில் அதாவது சில வாரங்களுக்கு முன்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என கூறியுள்ளார். இந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் இளவரசர் சார்லஸ் லண்டனில் அவருடைய அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட அவர் கைகுலுக்குவதை தவிர்த்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இத்தனை முன்னெச்சரிக்கையாக இருந்த இளவரசருக்கு எப்படி கொரோனா வந்தது என தெரியவில்லை.

    எத்தனை பேருக்கு பாதிப்பு

    தங்களது பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து சார்லஸின் பெற்றோர் எலிசபெத் 2, பிலிப் உள்ளிட்டோர் அரண்மனையிலிருந்து வெளியேறி விண்ட்சர் கேசிலில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் கொரோனாவுக்கு 8167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 422 பேர் பலியாகியுள்ளனர். 145 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    English summary
    UK Prince Charles has tested postive for coronavirus, says palace spokesperson.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X