லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நெருக்கடியில்.. இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்று கொள்ள வேண்டும்.. சார்லஸ் பாராட்டு

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிலையான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    உலக நாடுகள் இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் - Prince Charles

    லண்டனில் இந்தியா குளோபல் வீக் எனும் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இளவரசர் சார்லஸ் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்.

    100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்- ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்- ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

    சந்தை

    சந்தை

    அப்போது அவர் பேசுகையில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து உலகை மீண்டும் கட்டமைக்க வேண்டும். இயற்கை, சமூக, மனித மற்றும் உடல் மூலதனத்தின் சமநிலையின் மூலம் நீண்ட கால மதிப்பை உருவாக்கும் நிலையான சந்தைகளை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது.

    முதலீடு

    முதலீடு

    மூலதனத்தின் 4 வடிவங்களில் முதலீடு செய்வது வாழ்க்கைத் தரத்தையும் நல்வாழ்வையும் எல்லா இடங்களிலும், குறிப்பாக ஏழ்மையான மக்களுக்கு நிலையான வழியில் உயர்த்த முடியும். நிலையான வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து நான் இந்திய பிரதமர் மோடியுடன் பேசியுள்ளேன். தன்னை புதுப்பித்துக் கொள்ள முற்படும் போது உலகம் இந்தியாவிடம் இருந்து அபரிகிரகா என்ற பண்டைய யோக ஞானத்தை கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது.

    அவசியம்

    அவசியம்

    (அபரிகிரகா என்பது பேராசையில்லாத தன்மை). இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டு அதன் தத்துவமும் மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன. அபரிகிரகா யோக கொள்கை, வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தில் அவசியமானவற்றை மட்டுமே வைத்துக் கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது.

    நெருக்கடி

    நெருக்கடி

    பண்டைக்கால ஞான உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இங்கிலாந்தில் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தோருடன் நான் நிறைய விவாதங்களை நடத்தியுள்ளேன். ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்புக்கான லட்சியத்தால் நான் எப்போதும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இதுகுறித்து அனைவருக்கும் கற்பிக்க வேண்டியது அதிகம் என நம்புகிறேன் என்று சார்லஸ் தெரிவித்தார்.

    English summary
    Prince Charles says that World can learn from India that how to build sustainble future during this coronavirus crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X