லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹாரி - மேகன் இனி பொதுமக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தமாட்டாங்க.. வாங்கிய பணத்தை அளிக்க முடிவு

Google Oneindia Tamil News

லண்டன்: அரச குடும்ப கடமைகளில் இருந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் விலகுகிறார்கள். இனி அவர்கள் பட்டங்களை குறிப்பிட்டு அழைக்கப்பட மாட்டார்கள் என்பது பிரிட்டன் மக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்தமாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் HRH - His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டே அழைக்கப்படுவார்கள்.

ஆனால் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகுவதால் இனி பட்டங்களை குறிப்பிட்டு அழைக்கப்பட மாட்டார்கள்.

250 கிலோ எடை.. நடக்க முடியாத நிலை.. ஐஎஸ் பயங்கரவாதி அபு அப்துல் பாரி கைது.. ஈராக் அரசு அதிரடி250 கிலோ எடை.. நடக்க முடியாத நிலை.. ஐஎஸ் பயங்கரவாதி அபு அப்துல் பாரி கைது.. ஈராக் அரசு அதிரடி

பயன்படுத்த மாட்டார்கள்

பயன்படுத்த மாட்டார்கள்

அத்துடன் அரச கடமைக்காக இனி பிரிட்டன் பொதுமக்களின் வரிப்பணத்தையும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் பயன்படுத்த மாட்டார்கள்.

பொதுமக்கள் பணத்தை

பொதுமக்கள் பணத்தை

பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவு செய்துள்ளார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

சுதந்திரம் அளித்தார்

சுதந்திரம் அளித்தார்

அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் முடிவுக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் முழு ஆதரவு அளித்துள்ளார். தனது பேரக்குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த அவர் எப்போதும் ஹாரி-மேகன் மற்றும் ஆர்ச்சி என் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வேலைக்கு செல்வார்கள்

வேலைக்கு செல்வார்கள்

ஹாரி மற்றும் மேகன் இருவரும் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மாறி மாறி தங்கள் காலத்தை கழிக்க உள்ளார்கள். பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் இவரும் முழு நேரப் பணிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்கள். வேலைக்கு சென்று அந்த பணத்தில் உழைத்து வாழ விரும்புவதாக முன்பே ஹாரி கூறியிருந்தார்.

English summary
Prince Harry- Meghan, will no longer be known as "royal highnesses," surrendering their top titles. Harry and Meghan announced they will repay $3 million in British taxpayer funds that was used to refurbish their home near Windsor Castle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X