• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாட்டி போட்ட கல்யாண கவுனுடன்.. திருமணம் செய்து இங்கிலாந்து இளவரசி.. கொரோனாவால் சிம்பிளாக முடிந்தது!

|

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது திருமணத்தின் போது போட்டுக் கொண்ட கவுனையே அவரது பேத்தியும் இளவரசியுமான பீட்ரைஸ் போட்டு கொண்டு ஆடம்பரம் ஏதும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதை அரச குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரச குடும்பம் குறித்து வரும் செய்திகளை நாம் ஆச்சரியத்துடனும் சுவாரஸ்யத்துடனும் படிப்போம். அவர்கள் வீட்டில் நடக்கும் சடங்குகளாகட்டும், திருமணம் மற்றும் விசேஷங்களாட்டும், நாட்டு மக்களுக்கு ராணியின் வாழ்த்து செய்தியாகட்டும், அவரது உடைகள், கிரீடம் என அனைத்துமே நமக்கு ஆச்சரியம்தான்.

அந்த வகையில் அண்மையில் அரச பதவி வேண்டாம் என கூறிவிட்டு தனது மனைவி மெகன் மற்றும் குழந்தைகளுடன் அரண்மனையை விட்டு வெளியேறினார் இளவரசர் ஹாரி.

உழைத்து

உழைத்து

ஒருமுறை வெளியேறிவிட்டால் மீண்டும் அந்த குடும்பத்தில் இணைய முடியாது. சொத்தில் ஏதும் பங்குகளும் கிடைக்காது, தாமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்தே ஹாரி வெளியேறியது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. அது போல் நடிகையும் தனது மனைவியுமான மெகனுக்காக ஒரு இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டது என அனைத்துமே பிரமிப்புதான்.

சிம்பிள்

சிம்பிள்

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் திருமணம் என்றாலே பெரிய விழாவாக கொண்டாடுவர். அந்த வகையில் ராணியின் பேட்டி பீட்ரைஸ் (31), எடோஆர்டோ மாபெல்லி ஆகியோரின் திருமணம் இந்த வாரம் அரண்மனையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது. இவர்களது திருமணம் மே மாதமே விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த கொரோனா லாக்டவுனால் அவர்களது திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்த வேண்டிய நிலையாயிற்று.

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

31 வயதாகும் பீட்ரைஸ் இளவரசர் ஆன்ட்ரூ மற்றும் சாரா தம்பதியின மூத்த மகளாவார். இவரது திருமணம் விண்ட்சர் கேஸ்டிலில் நடைபெற்றது. ஜூலை 4 -ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லாததால் இந்த திருமணத்தில் பிரின்ஸ் பிலிப், ராணி எலிசபெத் உள்பட 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அட்டிகை

அட்டிகை

வெளியாட்கள் என யாரையும் அழைக்காமல் முன்கூட்டியே அறிவிக்காமல் அரச குடும்பத்தில் முதல்முறையாக ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது. முடிசூட்டிக் கொள்ளும் வரிசையில் 9ஆவது இடத்தில் இருப்பவர் பீட்ரைஸ், அவர் நார்மன் ஹார்ட்நெல் என்பவர் டிசைன் செய்த வின்டேஜ் ஐவரி ஆடையையும் வைர அட்டிகையையும் அணிந்திருந்தார்.

  Vanitha வெளியிட்ட Evidence Video | Peter Paul, Elizabeth
  தேசிய கீதம்

  தேசிய கீதம்

  இந்த ஐவரி கவுனும் வைர அட்டிகையும் ராணி எலிசபெத் தனது திருமணத்தின் போது அணிந்திருந்தது. 1919-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த ஆடையை பிலிப்பை 1947-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட போது இதே ஆடையை அணிந்திருந்தார். இந்த திருமணத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது, ஆனால் பாடப்படவில்லை.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Princess Beatrice wore vintage dress of Queen Elizabeth for her marriage with only 30 attendees.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X