உடலுறவின் போது பெண்கள் ஏன் அதிகம் முனகுகிறார்கள் தெரியுமா? ஆய்வாளர்கள் சொல்லும் காரணம்! ஏன்?
லண்டன்: மனிதர்கள் உடல் உறவின்போது எழுப்பும் சத்தத்திற்கான அர்த்தங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் பெரும் கவனிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகில் ஏறத்தாழ மற்ற உயிரினங்கள் அனைத்துமே இனப்பெருக்கத்திற்கென்று ஒரு காலகட்டத்தை வைத்திருக்கும். அந்த காலத்தில் ஒரு இணையை தேர்ந்தெடுத்து இணை சேர்ந்து புதிய சந்ததிகளை உருவாக்கும்.
ஆனால் மனிதர்கள் மட்டும்தான் அனைத்து நேரத்திலும் இணை சேர்வதற்கு தயாரான வகையில் இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே ஒரு ஆச்சரியம்தான்.
வேலை நேரத்தில் உடலுறவு..! த்ரிலுக்காக செய்யும் பெண்கள்.. ஆண்கள் இதில் ரொம்பவே மோசம்! புதிய ஆய்வு

ஆய்வு
இவ்வாறு இருக்கையில் உடலுறவின் போது எழுப்பப்படும் சத்தம் குறித்து பிரிட்டன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது நீங்கள் புது ஜோடி எனில் உடலுறவில் அதிகம் சத்தம் போட மாட்டீர்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். ஏனெனில் ஒருவரை ஒருவர் நன்கு உணர்ந்த பின்னர் இணையில் நம்பிக்கை அதிகமாக இருக்கும், அப்படி இருக்கும்போதுதான் உடலின் அனைத்து இயக்கங்களும் கூச்சப்படாமல் சம்பந்தப்பட்டவர்களால் வெளிப்படுத்த முடியும். எனவே புது ஜோடிகள் சத்தம் போட மாட்டார்கள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது சுமார் 2,000 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி
அதேபோல 73% பெண்களும் 68% ஆண்களும் உடலுறவின் போது தொடக்கத்தில் குரல் எழுப்புகிறார்கள். நம்மில் பலரும் உடலுறவு என்பது ஒரு உடற்பயிற்சி என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இது பாதி உண்மை, பாதி பொய். ஏனெனில் உடற்பயிற்சியில் நாம் செலவிடும் கலோரிகளை விடவும் உடலுறவில் குறைவான கலோரிகளைதான் செலவிடுகிறோம். எனவே உடலுறவை லேசான உடற்பயிற்சி என்று அழைக்கலாம். மற்றொருபுறம் உடலுறவின் போது வேகமாக மூச்சு வாங்கப்படும். இதற்கு சிறுநீரகத்திற்கு மேல் சுரக்கும் அட்ரினலின் சுரப்பிதான் காரணம். இது சுரப்பதால்தான் 'அந்த' நேரத்தில் நம்மால் உற்சாகமாக இருக்க முடிகிறது.

பழிவாங்கல்
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். உடலுறவின் போது முனகலை 33% ஆண்களும் 34% பெண்களும் மிகவும் கவர்ச்சிகரமான விஷயமாக உணர்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள்தான் அதிகமாக போலியாக முனகுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்களை விரைவில் உச்சமடைய வைக்க முடியும். அதாவது சுமார் 66% பெண்கள் ஆண்களை பழிவாங்க இவ்வாறு போலியாக முனகுகிறார்கள். சில பெண்கள் மிகவும் மோசமாக முனகுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் விரைவில் கருவடைய இருக்கிறார்கள் என்பதுதான். இதையும் தாண்டி சில பெண்கள் அலறுவது கூட உண்டு. இதற்கு பெரியதாக எந்த அர்த்தமும் கிடையாது. அவர்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பதால்தான் இப்படி அலறுகிறார்கள்.

மறுமொழி
பெண்கள் இப்படி இருக்க, ஆண்களுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை. அவர்கள் உடலுறவின்போது அமைதியாக இருக்கவே விரும்புகிறார்கள். அதற்கு பதில் பெண்களை அந்தரமான இடங்களில் ஆண்கள் தொடுவது பெண்களுக்கான மறுமொழியாகும். உடலுறவின்போது மனித மூளையை ஸ்கேன் செய்து பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட இடங்கள் ஒன்றாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே உடலுறவின்போது பெண்கள் கூக்குரலிட்டால் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கவனமாக இருங்கள் ஆண்களே தப்பி தவறி கூட நீங்கள் வேறு ஒரு பெண்ணின் பெயரை அந்த நேரத்தில் சொல்லிவிடாதீர்கள். அது உங்கள் உறவுக்கு ஒரேயடியாக முடிவு கட்டிவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.