94.3% வரை துல்லியம்.. கொரோனாவை சரியாக கண்டறியும் நாய்கள்.. லண்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதித்தது எப்படி
லண்டன்: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், லண்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் நாய்களைக் கொண்டு கொரோனா பாதிப்பைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தாலும், எந்த நாட்டினாலும் கொரோனா பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
இதனால் எங்கு வெளிநாடுகளிலிருந்து மீண்டும் கொரோனா பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பல நாடுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கொரோனா பரிசோதனை
உலகளவில் தற்போது வரை கொரோனாவை கண்டறிய பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகிறது. ரேப்பிட் ஆண்டிஜன் முறையில், அதிகபட்சமாக சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பைக் கண்டறியலாம். ஆனால், இவை மிகவும் துல்லியமாக இருப்பதில்லை. RT PCR சோதனைகள் துல்லியமாக இருக்கும் என்றாலும், முடிவுகள் வர அதிகபட்சமாக ஓரிரு நாட்கள் வரை ஆகும். எனவே, விமான நிலையத்தில் இந்த பரிசோதனை முறையைப் பின்பற்றுவது சிரமம்.

புதிய ஆய்வு
இந்நிலையில், லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நாய்களைக் கொண்டு கொரோனா பாதிப்பைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் 6 நாய்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். விமான நிலையங்களில் 100க்கும் அதிகமானவர்களைக் கூட 30 நிமிடங்களில் நாய்கள் சோதனை செய்துவிடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை கண்டறியும் நாய்கள்
சுமார் 3,500க்கும் மேற்பட்டோரின் சாக்ஸ்களை நாய்களை மோப்பம் பிடிக்க வைத்துள்ளனர். அவர்களில் யாரெல்லாம் கொரோனா நோயாளிகளை என்பதை நாய்கள் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டுள்ளது. நாய்கள் தீவிரமாக கொரோனா பாதிப்பு மட்டுமின்றி லேசான அல்லது asymptomatic கொரோனா நோயாளிகளையும் சரியாகக் கண்டறிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

94.3% துல்லியம்
நாய்களில் 94.3% வரை மிகத் துல்லியமாக கொரோனா பாதிப்பைக் கண்டறிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாகவே நாய்களில் மோப்ப சக்தி மிகவும் சக்திவாய்ந்தவை. மிகப் பெரிய நீச்சல் குளத்தில் உள்ள ஒறு ஸ்பூன் சக்கரையைகூட நாய்களால் எளிதாகக் கண்டறி முடியும். இதுபோல புற்றுநோய், மலேரியா உள்ளிட்ட நோய்களையும் நாய்களைக் கொண்டு கண்டறியும் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்தியா
நாய்களில் 94.3% வரை மிகத் துல்லியமாக கொரோனா பாதிப்பைக் கண்டறிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாகவே நாய்களில் மோப்ப சக்தி மிகவும் சக்திவாய்ந்தவை. மிகப் பெரிய நீச்சல் குளத்தில் உள்ள ஒரு ஸ்பூன் சக்கரையைகூட நாய்களால் எளிதாகக் கண்டறி முடியும். இதுபோல புற்றுநோய், மலேரியா உள்ளிட்ட நோய்களையும் நாய்களைக் கொண்டு கண்டறியும் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.