லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராணி எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் இதுதான்.! படங்களை வெளியிட்ட அரசு குடும்பம்! மக்கள் கண்ணீர்

Google Oneindia Tamil News

லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படத்தை அரசு குடும்பம் இப்போது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.

பிரிட்டன் நாட்டில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ராணி எலிசபெத். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக இவருக்கு சில உடல்நிலை பிரச்சினைகள் இருந்தன.

96 வயதான ராணி எலிசபெத் கடந்த செப். 8இல் வயது உயிரிழந்தார். அவர் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் ஓய்வெடுத்து வந்த நிலையில், அங்கே அவர் உயிரிழந்தார்.

சிபிஎஸ்இ 6ம் வகுப்பு புத்தகத்தில் சனாதன பாடம்.. உடனடியாக நீக்கவும்..ஒன்றிய அரசை சாடும் ரா முத்தரசன்! சிபிஎஸ்இ 6ம் வகுப்பு புத்தகத்தில் சனாதன பாடம்.. உடனடியாக நீக்கவும்..ஒன்றிய அரசை சாடும் ரா முத்தரசன்!

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

ராணியின் மறைவு பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரிட்டன் நாட்டின் புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். அவரது முடிசூட்டு விழா விரைவில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ராணியின் மறைவைத் தொடர்ந்து அங்கு 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. ராணி எலிசபெத் உடலுக்குப் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

சுமார் 2.50 லட்சம் மக்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி திங்கள்கிழமை ராணி எலிசபெத்திற்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அரசு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அங்குக் கூடி இருந்தனர். அரசு குடும்பத்தில் பதவியில் உள்ளவர்கள் ராணுவ உடையிலும், பதவியில் இல்லாத இளவரசர் ஹாரி உள்ளிட்ட மற்றவர்கள் சாதாரண உடையிலும் வந்து இருந்தனர்.

ராணியின் உடல்

ராணியின் உடல்

ராணி எலிசபெத் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு அனைத்து மதச் சடங்குகள் நடத்தப்பட்டன. அங்கிருந்து தனியாக வாகனம் ஒன்றின் மூலம் வின்ட்சர் கோட்டைக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இருந்த போதிலும், அங்கு அவரது உடல் அங்கு முதலில் புதைக்கப்படவில்லை.

ராயல் வால்ட்

ராயல் வால்ட்

இறுதிச்சடங்கு நிகழ்வுகளை டிவியில் நேரலையில் பார்த்தவர்கள் இதைக் கவனித்து இருக்கலாம். ராணியின் உடல் ராயல் வால்ட்டில் ( royal vault) இறக்கப்பட்டது. ராயல் வால்ட் என்பது வின்ட்சர் கோட்டையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தின் கீழே சுமார் 16 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஒரு அறையாகும். இங்கு 200 ஆண்டுகளாக உயிரிழந்த சில முக்கிய அரசு குடும்ப உறுப்பினரின் உடல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

நல்லடக்கம்

நல்லடக்கம்

ஏனென்றால் ராணியின் உடல் நல்டக்கம் செய்யப்படும் நிகழ்வில் அரசு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை. டிவியில் ஒளிபரப்பவும் அனுமதி இல்லை. இதன் காரணமாகவே ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டது. இதற்குப் பின்னர், கடந்த வாரமே தனியாக ஒரு நிகழ்வு நடத்தப்பட்டு அதில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புகைப்படம்

புகைப்படம்

அதில் அரசு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனிடையே இப்போது ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படத்தை அரசு குடும்பத்தினர் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். மேலும், "மன்னர் ஆறாம் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணி எலிசபெத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல் ஒன்று நிறுவப்பட்டது" என்று பதிவிட்டுள்ளனர். இந்த கிங் ஜார்ஜ் நினைவு சேப்பல் என்பது செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள அமைந்துள்ளதாகும்.

எங்கே

எங்கே

இந்த கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் தான் ராணியின் தந்தை மற்றும் தாய் ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவரது உடலுக்கு அருகிலேயே அவரது கணவர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு உயிரிழந்த இளவரசர் பிலிப்பின் உடல் இத்தனை மாதங்களாக ராயல் வால்ட்டில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Queen elizabeth Final resting place is at the King George VI Memorial Chapel: Queen elizabeth body is now at london St George’s Chapel, Windsor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X